யோகி பாபுவை விமர்சித்து தயாரிப்பாளர் ராஜா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களின் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதல் இடத்தில் இருக்கு. இவர் ரஜினி, அஜித், விஜய் என்று பல தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளைப் பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமீபத்தில் யோகி பாபு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
யோகிபாபு குறித்த தகவல்:
மேலும், யோகி பாபு அவர்கள் வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். தற்போது இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் காமெடி ரோலிலும் கலக்கி வருகிறார். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாகிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோபி பாபு நடித்திருக்கிறார்.
கஜானாபடம்:
இந்த படத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கஜானா. இந்த படத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் பேண்டஸி அட்வென்சராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஸ்கொயர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
யோகி பாபு விமர்சனம்:
இந்த படம் வருகிற 18-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது இந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜா, இங்கு யோகி பாபு வந்திருக்கிறாரா? அவர் வரவில்லை. அப்போ அவருக்கு 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்று அர்த்தம். ஒரு படத்தினுடைய பிரமோஷனுக்கு வருவதற்கு பணத்தை கொடுத்தால் தான் வருவேன் என்று நடிகர்கள் செய்கிறார்கள்.
யோகிபாபு தரப்பில் சொன்னது:
ஒரு படத்தின் வெளியீடு என்பது ஒரு நடிகருக்கு குழந்தை பிறப்பது போல. அந்த குழந்தையை வளர்க்க வேண்டியது நடிகருடைய பொறுப்பு தான். நடிகர் யோகி பாபு இசை வெளியீட்டு விழாவுக்கு 7 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்று வரவில்லை. இது ரொம்ப கேவலமான செயல். ஒரு படத்தினுடைய வெளியீட்டு விழாவுக்கே வரவில்லை என்றால் நீங்கள் நடிகனாக இருக்கவே லாயக்கி இல்லை. இதற்கு காலம் விரைவிலேயே பதில் சொல்லும் என்று ரொம்ப மோசமாக பேசி இருக்கிறார். மேலும், இது தொடர்பாக யோகி பாபு தரப்பில், என்னை விமர்சித்தவர் யார் என்றே தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் வேறு ஒருவர், இவர் கிடையாது என்று கூறப்பட்டிருக்கிறது.