ஆட்டோகிராப், திருப்பாச்சி படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த மல்லிகாவா இப்படி ஒரு அல்ட்ரா மாடர்ன் உடைகளில்.

0
2877
mallika

சினிமாவை பொறுத்து வரை நடிப்பையும் தாண்டி லக் என்ற ஒரு விஷயம் இல்லை என்றால் நீண்ட வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியாது. அந்த வகையில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பல்வேறு நடிகைகள் அந்த படங்களுக்கு பின்னர் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகின்றனர்.அப்படி போனவர் தான் ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து 90 ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த நடிகை மல்லிகா. இவரது உண்மையான பெயர் ரீஜா ஜான்சன்.

தமிழ் சினிமாவில் பல்வேறு தரமான ஹிட் படங்களை கொடுத்த சேரன் முதன் முறையாக ஹீரோவாக களமிறங்கிய படம் ஆட்டோகிராப். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தில் சேரன், கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சேரனின் பள்ளிப்பருவ காலத்தில் கமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த ரீஜா ஜான்சன்.

- Advertisement -

கேரளாவை சேர்ந்த இவர் 2002 ஆம் மலையாளத்தில் வெளியான நிழல் கூத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து கவர்ந்த சேரன், இவருக்கு ஆட்டோகிராப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ஆட்டோகிராப் படத்திற்கு பின்னர் இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் தமிழில் குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும், தோட்டா, சென்னையில் ஒரு நாள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், சன் தொலைக்காட்சியில் அஞ்சலி, திருவிளையாடல் போன்ற சீரியல்களில் கூட நடித்து இருந்தார். படங்கள் மற்றும் சீரியல்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர் படு மாடர்ன் உடையில் கொடுத்த போஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement