நவீன காலத்தின் மஞ்சு தான் ரெனேவா ? ‘அவள் அப்படித்தான்’ Vs ‘நட்சத்திரம் நகர்கிறது’ – ஒரு ஒப்பீடு.

0
249
rena
- Advertisement -

‘அவள் அப்படித்தான்’ படத்தின் நவீனமயமாக்கல் தான் நட்சத்திரம் நகர்கிறது படம் என்று தற்போது சோசியல் மீடியாவில் புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் கலையரசன் சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து வேண்டும் புதுச்சேரிக்கு வருகிறார். பின் அவர் அங்கு ஒரு நாடக குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது குழுவில் உள்ள நபர்களுடன் கரையரசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருந்தாலும், கரையரசன் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் நாடக குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடக்கிறது.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம்:

இதற்கிடையே ரெனே- இனியன் இருவரும் காதலித்து வருகிறார்கள். திடீரென்று அவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகிறது. இப்படி பல கிளை கதைகளாக நட்சத்திரம் இப்படி படம் சென்று கொண்டிருக்கின்றது. இறுதியில் கரையரசனின் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா? கரையரசனுக்கு என்ன ஆனது? ரெனே-இனியன் காதல் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் காதலுக்கு பாலின வேதங்கள், ஜாதி மதங்கள் எல்லாம் கிடையாது என்பதை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சல் படைத்தவர்களாகவே பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் துஷாரா விஜயன். இவர் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, இந்த படத்தின் ஒரு நட்சத்திரமாகவே அவர் மின்னுகிறார். இந்நிலையில் அவள் அப்படித்தான் படத்தின் நவீனமயமாக்கல் தான் நட்சத்திரம் நகர்கிறது படம் என்று தற்போது சோசியல் மீடியாவில் புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

-விளம்பரம்-

அவள் அப்படிதான் படம்:

அதாவது, ருத்ரய்யாவின் அவள் அப்படிதான் படத்தில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரம் மஞ்சு. இந்த கதாபாத்திரத்தை போல தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அவள் அப்படித்தான் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் காலத்திற்கு ஏற்ப நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரினோ கதாபாத்திரத்தை எடுத்து இருக்கிறார். அடிப்படையில் இரண்டு பேருமே ஏதோ ஒரு பாதிப்பில் இருந்து மீண்டு தங்களை வலிமையாக்கி கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேருடைய பேச்சும், உடல் மொழியும், துணிச்சல், தைரியம் எல்லாமே ஒன்றாக இருக்கு.

மஞ்சு Vs ரெனா :

அவள் அப்படித்தான் மஞ்சு கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியா காதலனால் பயன்படுத்தப்பட்டு ஏமாந்து நிற்கிறார். இதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுந்து மூலையில் முடுங்கவில்லை. எதிர்த்து போராடி நிற்பார். அதேபோல் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனோவிடம் அவருடைய காதலன் ஜாதி குறித்து பேசும் போது துணிச்சலாக காதலனை அடிப்பார். இப்படி இரண்டு பேருடைய கதாபாத்திரமும் தற்போது இருக்கும் பெண்களின் சுயமரியாதைக்காண அழுத்தமான கதாபாத்திரங்களாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வரும் காளிதாஸ் ஜெயராமன் கதாபாத்திரமும், அவள் அப்படித்தான் படத்தில் வரும் கமலின் கதாபாத்திரமும் ஒன்றுதான். கிட்டத்தட்ட இரண்டு பேருமே சமுதாயத்திற்காக முகமூடி போட்டு வாழ்ந்து வருகிறார்கள். அதே போல் படத்தில் கலையரசன் கதாபாத்திரமும், ரஜினியின் கதாபாத்திரமும் ஒன்றுதான். இப்படி அவள் அப்படித்தான் படத்தின் நவீன மயமாக்களே நட்சத்திரம் நகர்கிறது படம் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement