தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது.

தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள். இதை அடுத்து பெரும்பான்மையாக 144 எம் எல் ஏக்கள் பெற்று விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்றவுடன் விஜய் அவர்கள் செம மாஸாக பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேலும், முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்வர் விஜய்:
இப்படி இருக்கும் நிலையில் தவெக சார்பில் எம்எல்ஏவாக இருக்கும் கமலி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் பாஜக வேட்பாளர் இந்திய மத்திய இணை அமைச்சர் எல் முருகன். இவர்களுக்கிடையில் தான் கடுமையான போட்டி நிலவும் என்று அந்த பகுதியில் பேசப்பட்டது.

கமலி எம்.எல்.ஏ வெற்றி:
இந்த இரண்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் நீயா நானா என்ற அளவுக்கு யுத்தம் நடந்தது. அந்த சமயத்தில் தான் சத்தமே இல்லாமல் மூன்றாவதாக நின்றவர் தவெக வேட்பாளர் கமலி. தேர்தலில் முடிவில் இருவரையும் பின்னுக்கு தள்ளி அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வாகையும் சூடி அனைவருக்குமே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆழ்த்தி இருந்தவர் கமலி. தற்போது இவர் தவெக எம்எல்ஏவாக அவிநாசி தொகுதியில் பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது தான் ஆகிறது.

கமலி குறித்த தகவல்:
இவருடைய கணவர் இ சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இல்லத்தரசியாக தான் இவர் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்திருந்தார். கமலி முதுகலை பட்டதாரி. அரசியலின் மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக தான் தவெக-வில் இணைத்து செயல்பட்டு வந்தார். அவிநாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டார். 15000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக, பாஜக எல்.முருகனைத் தோற்கடித்தார். இவருடைய முயற்சியை தான் பாராட்டியும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
சாமானிய மக்களும் எம்எல்ஏ ஆகலாம் என்று தவெக ஆட்சியில் விஜய் அவர்கள் நிரூபித்து விட்டார்.






