மீண்டும் ஆயிரத்தில் ஒருவன்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் உற்சாகம்.!

0
2830
Aayirathil-oruvan
- Advertisement -

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம் என்ரே கூறலாம் 

-விளம்பரம்-
Ayirathil-oruvan

படம் வெளியான பின்னர் பல்வேறு விமர்சங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கார்த்தி,ரீமாசென், போன்றவர்கள் இந்த படத்தில் நடித்தாலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்த பார்திபானுக்கு இந்த படத்தில் நல்ல பெயர் கிடைத்து.

- Advertisement -

மேலும், அவருக்கு தேசிய விருது கூட ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவரவிட்டார் என்ரெல்லாம் கூட செய்திகள் வந்தது. இந்த படத்தில் நடிகர் பார்திபனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் செல்வராகவனின் தம்பி நடிகர் தனுஷ் என்று கூட கூறப்பட்டது.

இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் (மார்ச் 5) செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஜிகே சினிமாஸ் ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரையிட இருக்கிறார்கள் இந்த தகவலை தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement