இப்படி ஒரு விடியோவை பகிர்ந்து.! 10 வருடத்திற்கு முன் பாஸ்கி சொன்னதை பொய் என்று நிரூபித்த ஐஸ்வர்யா.!

0
1670
ayswarya-rajesh
- Advertisement -

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

-விளம்பரம்-

சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை தான் சம்பளம் பெற்றுள்ளார். அதுவும் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும் என்று சமீபத்தில் கூறி இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

- Advertisement -

சமீபத்தில் இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்த போவது நிகழ்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாஸ்கி, சின்னத் திரையில் ஒரு ரௌண்டு வருவ என்று ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா, சின்னத்திரை இல்ல சார் பெரியாத்திரையில் வருவேன் என்று கூறுகிறார். ஆனால், தற்போது ஐஸ்வர்யா சொன்னது போலவே ஐஸ்வர்யா பெரிய திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

Advertisement