நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா .! வைரலாகும் புகைப்படம்.!

0
5796
Ayswaryarajesh
- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு திரையுலகில் வெளியான ‘அவர்களும் இவர்களும்’ படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பல துறைகளில் பங்காற்றி வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை பெயர் ராஜேஷ். இவர் தெலுங்கு மொழி திரைப்படங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தாவும் ஒரு நடிகர் ஆவார்.குடும்பமே கலை குடும்பமாக உள்ளது.மேலும், இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தான் சினிமா துறைக்கு முதன்முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமானர்.

-விளம்பரம்-

தற்போது சினிமா துறையில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆவார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் .அதிலும் முதல் இடத்தில் வெற்றியும் பெற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்.இதனைத்தொடர்ந்து ‘ அட்டகத்தி’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

- Advertisement -

இந்த படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்.மேலும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து விட்டார் இவர் சினிமா துறையில் உள்ள முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உடன் அதிகமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தன்னுடைய தாயார் உடன் நிற்கும் புகைப்படத்தை முதன்முதலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது உள்ள ட்ரெண்டிங்கான தகவல் இது தான். அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையில் உள்ள நட்சத்திரங்களில் ஜொலிக்கும் நட்சத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் வேற லெவல்ல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று தந்தது. இந்த படம் வசூலிலும் தெறிக்க விட்டது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது நம்ம வீட்டுப் பிள்ளை படம்.

-விளம்பரம்-

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.சினிமா உலகில் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் தூள் கிளப்பியுள்ளார் என்று கூட சொல்லலாம். படமே சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களால் தான் ஓடியது என்று கூட ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறமை கொண்டவர் என்று ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டியும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement