ஆயுத எழுத்து சீரியல் நடிகரா இது. 3 வருடத்தில் எப்படி மாறியுள்ளார் பாருங்க.

0
50467
ayutha-ezhuthu
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை மாற்றுவது சகஜமான ஒன்று. அதிலும் ஹீரோ,ஹீரோயின் மாற்றுவதும் வழக்கமான ஒன்று. ஆனால், விஜய் டிவியில் வெற்றிகரமாக போய் கொண்டு இருக்கும் “ஆயுத எழுத்து” சீரியலில் ஒரே சமயத்தில் நாயகன், நாயகி இருவரையுமே மாற்றி உள்ளார்கள். இது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சீரியலில் நாயகனகாக நடித்திருந்த அம்சத் கானுக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் வந்ததால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சீரியலின் நாயகி ஸ்ரீத்து மாற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் வரை தெரியவில்லை. இவர்களுக்கு பதிலாக சீரியலின் புதிய ஜோடி சரண்யா மற்றும் ஆனந்த் ஆவார். இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஆனந்த். இவர் ‘போஸ்ட் மேன்’ எனும் வெப் சிரீஸில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றவர். தற்போது ஆயுத எழுத்து சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். ஆனந்த்தின் உடல் தோற்றம் இந்த ஆயுத எழுத்து சீரியலில் சக்தியின் கதாபாத்திரத்துக்குப் பலம் சேர்க்கிறது என்றும் பலர் கூறுகிறார்கள். ஆனந்த் அவர்கள் தன்னுடைய சின்னத்திரை பயணம் குறித்து பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது,நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். நான் சென்னைக்கு விஸ்காம் படிக்க வந்தேன். காலேஜ் படிக்கும் போது எனக்கு நடிக்கிறது ஆசை. ஒரு பக்கம் பிசினஸ் பண்ணிக்கிட்டே என்னுடைய படிப்பை படித்து முடித்தேன். சினிமாத்துறையில் எனக்கு யாரையும் தெரியாது. உதவி இயக்குனரான சக்தியை மட்டும் தான் தெரியும்.

- Advertisement -

அவர் மூலமாக சின்ன சின்ன குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சில பட வாய்ப்புகளும் என்னை தேடி வந்தது. இன்னிக்கு வரைக்கும் என்னுடைய வழிகாட்டி, என்னுடைய குரு அவர் தான். சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிறது. என்னுடைய உழைப்புக்கு கிடைத்த பலன் “ஆயுத எழுத்து” சீரியல். பேட்ஸ் மேன் வெப்ஸ் சீரியஸ்ல என்னை பார்த்து விட்டு ஆயுத எழுத்து சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஆடிசனுக்கு போனேன். நான் நடிக்கணும்னு முடிவு செய்து தான் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த நாளிலிருந்து லைஃப்ல நிறைய கஷ்டங்களை பார்த்து இருக்கிறேன். நல்ல நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி என்னை ரெடி பண்ணி வருகிறேன்.

எனக்கு சீரியல் புதுசாக இருந்தாலும், என்னுடைய சீரியல் டிம் நபர்கள் என்னை ஜாலியாகவும், அவர்களில் ஒருவராகவும் தான் பார்த்துட்டு வராங்க. நான் ஒரு படத்தில் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அந்த படம் சீக்கிரமாகவே வெளி வரும் என்று கூறினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தையும், அண்மையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ஆனந்த் பகிர்ந்து உள்ளார். இது மூணு வருஷத்தில் இப்படி ஆகிவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். மூன்று வருடத்தில் இவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டாயா? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு ஆனந்த் கூறியது, நான் ஒல்லியாக இருப்பதை பார்த்து பலரும் என்னைக் கிண்டல் பண்ணாங்க. அதனால தான் எனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை என்று கூறினார்கள். எப்படியாவது வெயிட் போட்டு சினிமாவில் நடிக்கும் ஆசை காரணமாக தான் இப்படி ஆனேன். வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஜிம் போய் உடம்பை ஏத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement