ஆயுத எழுத்து சீரியல் கலெக்டர் ஸ்ரீத்துவா இது. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் பாருங்க.

0
57546
sreethu-krishnan

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களாக சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜா ராணி, சின்னத் தம்பி, கடைக்குட்டி சிங்கம், பாரதி கண்ணம்மா, சிவா மனசுல சக்தி, மௌன ராகம் என்று இப்படி அடிக்கி கொணடே போகலாம். அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து சமீபத்தில் துவங்கப்பட்ட சீரியல் தான் ஆயுத எழுத்து சீரியல். விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பிரபலமான சீரியல்க்ளில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் சீரியலாக விளங்கி வருகிறது இந்த சீரியல் தான்.

இந்த சீரியலில் கலெக்டர் என்ற இந்திரா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன். கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீத்து. அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

- Advertisement -

ஆனால், சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார் சீத்து. ஆயுத எழுத்து தொடரில் அவருடைய நடிப்பும் அழகும் , சீரியலில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என கூறி அட அந்த புள்ள’ தான் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். பின் சும்மா விடுவார்களா! சோசியல் மீடியாக்களில் மீம்ஸ் போட்டு இருந்தாங்க. இதுகுறித்து ஸ்ரீத்துவும் கூறியது, நானும் பார்த்தேன். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என கூறியிருந்தார். ஆனால், திடீரென்று ஸ்ரீத்து வெளியானது குறித்து ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவியது.

தற்போது ஆயுத எழுத்து சீரியலில் இவருக்கு பதிலாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான். இருப்பினும் ஸ்ரீத்து தான் இந்திரா கலெக்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். மேலும், ஸ்ரீத்துவை சீரியல் பக்கம் பார்க்கமுடியவில்லை என்றாலும் அம்மணி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஸ்ரீத்து மேக்கப் எதுவும் போடாமல் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement