டயலாக் வெச்சு வெளியே போன நடிகையை கஷ்டப்படுத்தாம இருக்கலாம் -ஆயுத எழுத்து சீரியல் முடவடைந்தது குறித்து முன்னாள் நடிகை ஸ்ரீத்து.

0
25582
seethu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியல் நிறைவடைந்தது குறித்து அந்த தொடரில் முதலில் நடித்து வந்த சீத்து கிருஷ்ணன் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

#VijayTelevision #VijayTv

A post shared by Vijay Television (@vijaytelevision) on

அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலும் ஒன்று. கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த சீரியல் துவங்கிய சில மாதங்களிலேயே பல பிரச்சனைகள்.ஆரம்பத்தில் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அஸ்மத் கான் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன் நடித்து வந்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும், ஆனந்த் என்பவரும் கமிட் ஆனார்கள்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து இந்த சீரியலில் சரண்யாவிற்கு முன் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரீத்து கிருஷ்ணனிடம் கேட்ட போது, நல்லா போயிட்டிருந்த சீரியல்ல நாயகியை மாத்தினா இதுதாங்க நடக்கும். ’பிக்பாஸ்’ தொடங்கப்போறதால முடிச்சுட்டாங்கனு சொல்றதுலெல்லாம் உண்மையில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதுகுறித்து பேசிய ஸ்ரீத்து, சீரியல்கள்ல ஆர்ட்டிஸ்டுகள் மாறுவது வழக்கமா நடக்குறதுதான். ஆனா ஒரு ஆர்ட்டிஸ்ட் வெளியேறி இன்னொருத்தர் வர்றப்ப தர்ற பில்டப் ஒருத்தரை காயப்படுத்தாத அளவுக்கு இருந்தா நல்லா இருக்கும். ‘முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்கியே’னெல்லாம் டயலாக் வெச்சு வெளியே போன நடிகையை கஷ்டப்படுத்தாம இருக்கலாம்” எனச் சொல்லியிருந்தார்.

-விளம்பரம்-

Advertisement