விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் சமைத்து வைத்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், எனக்கு சவாரி இருக்கிறது. நான் வர லேட் ஆகும் என்று சொல்லிவிட்டார். பின் சோழன் வீட்டிற்கு வராததால் நிலா விசாரித்தார். அப்போது பாண்டியன், சவாரி இருப்பதால் சோழன் லேட்டாக வருவான் என்று சொன்னார். இருந்தாலும், சோழன் வீட்டிற்கு வராததை நினைத்து நிலா கவலையில் இருந்தார்.

பின் நிலா, வாசலுக்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்து நிலா விசாரித்தார். இருந்தாலும் நிலா தூங்காமல் சோழன் வரும் வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். பின் நிலா, சோழன் வந்தவுடன் பேசிவிட்டு தூங்க சென்று விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், சோழனிடம் சொன்னார். இதனால் நிலா தன் மீது அக்கறை கொள்வதை நினைத்து சோழன் சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சோழன், நீங்கள் என் மீது அக்கறைப்பட்டு விசாரித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார். உடனே நிலா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னார். இப்படி நிலாவிடம் சோழன் பல்பு வாங்கியதை பல்லவன், பாண்டியன் இருவருமே பார்த்து கலாய்க்கிறார்கள். சோழனுக்கு எதுவுமே சொல்ல முடியவில்லை. நிலா தன்னை காதலிக்கிறாரா? என்ற கவலையில் சோழன் இருந்தார். அதற்குப்பின் நிலா, வேலை தேடி ஒரு கம்பெனிக்கு போனார். அந்த இடத்தில் நிலாவிற்கு வேலை கிடைத்து விட்டது.

நேற்று எபிசோட்:
குறைந்தபட்ச சம்பளத்தில் தான் வேலை கிடைக்கிறது. பின் இதைப்பற்றி சோழனிடம் நிலா சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க வானதி வந்தார். அப்போது இருவருமே தங்களுடைய சூழ்நிலை எடுத்துச் சொல்லி பேசி சமாதானம் ஆகி விட்டார்கள். இன்னொரு பக்கம் நிலா, வேலை கிடைத்ததை ஸ்வீட் கொடுத்து சேரனுக்கு சொன்னார். இதை கேட்டு சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அந்த இடத்திற்கு ஹிந்தி பெண்மணி வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் சேரன் குடும்பத்தை அவருடைய அண்ணா அறிமுகம் செய்து வைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், நிலாவை சாப்பிட சொல்கிறார். அப்போது அந்த ஹிந்தி பெண், நான் சாப்பாட்டை அதிகமாக தான் எடுத்து வந்திருக்கிறேன். எல்லோருமே சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, புதிதாக வேலை கிடைத்திருப்பதால் எல்லோருக்குமே துணி வாங்கி தருகிறார். ஆனால், சோழனுக்கு மட்டும் தரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். சோழன் மட்டும் வருத்தத்தில் இருக்கிறார். அதற்குப் பின் நிலா, சோழனுக்கு வாங்கிய துணியை கொடுக்கிறார். அதை பார்த்து சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் நிலா வேலைக்கு தயாராகி கிளம்புகிறார். அப்போது சேரன், நிலா முதல் நாள் வேலைக்கு போவதால் வீட்டில் பொங்கல் செய்து தருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா வேலைக்கு செல்வதால் சந்தோஷமாக தங்களால் முடிந்த கிப்டுகளை கொடுக்கிறார்கள். பல்லவன் பட்டாசு வெடிவைத்து கொண்டாடுகிறார். பல்லவனின் அப்பா, தன் மருமகள் வேலைக்கு போவதால் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






