விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், ஆலு செய்யப் போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே கலாய்த்தார்கள். அதற்குப் பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. இதை பார்த்து பதறிப் போன நிலா, ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றார். ஆனால் நடேசன் வரவில்லை. பின் வீட்டில் இருக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொன்னார். நிலா, நடேசனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சேரனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் சோழன் வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காயத்ரி விடாமல் போன் செய்து கொண்டிருந்தார்.

காயத்ரி விடாமல் சோழனுக்கு போன் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோழன், என்னதான் பிரச்சனை என்றார். அதற்கு காயத்ரி, எதற்காக என்னை அவாய்ட் பண்ணுகிறீர்கள்? என்றார். அதற்கு சோழன், திடீரென்று உன் நண்பர்களிடம் என்னை காதலன் என்று அறிமுகம் செய்து வைக்கிறாய். நான் எப்போது உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன் என்றார். அதற்கு காயத்திரி, எனக்கு உங்களை பிடித்திருந்தது என்று சொல்லிதானே உங்களிடம் பேச ஆரம்பித்தேன். நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்ன நடந்தது? எதற்காக இப்படி மாறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
அய்யனார் துணை:
கடுப்பான சோழன் போனை ஆப் செய்தார். இதனால் காயத்ரி ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் சந்தோஷமாக பேசி இருந்தார்கள். கடைசியில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொள்கிறார். அப்போது வீட்டிற்கு சோழன் வந்தார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தா, சேரனுக்காக சமைத்து எடுத்துக்கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார். பின் சந்தா, சேரனிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு கிளம்பு பார்க்கிறார். உடனே சேரன், நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்று சந்தாவை சைக்கிளில் உட்கார வைத்து கொண்டு ஓட்டினார். இதை பார்த்த கார்த்திகா, சேரனுக்கு நல்லபடியாக திருமணம் ஆனால் சந்தோசம் என்று எமோஷனலாக தன் அம்மாவிடம் பேசுகிறார். அதற்குப்பின் நடேசனுக்கு காய்ச்சல் குறைந்து விட்டது. குடிப்பதை நிறுத்த சொல்லி நிலா கேட்கிறார். ஆனால், அதை நடேசன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேரன், சந்தா கொடுத்த சாப்பாட்டை எல்லோரிடமும் கொடுத்து பகிர்ந்து சாப்பிடுகிறார். ஆனால், சோழன் மட்டும் டென்ஷனாகவே இருக்கிறார். பின் காயத்ரி நண்பர்கள் சோழனை பார்க்க வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அவர்கள், காயத்ரியிடம் ஏன் பேசவில்லை? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்கிறார்கள். சோழன், நான் காதலிக்கவில்லை என்று தன் தரப்பில் எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். அவர்கள் கேட்கவில்லை. பின்னவர்களை அங்கிருந்து சோழன் எப்படியோ பேசி அனுப்பி வைத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






