விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு மரியாதையே இல்லையா? வாசலில் நின்று வரவேற்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டார். அப்போது ஜெயந்தியின் அப்பா, நாங்கள் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தரகர் உங்களிடம் சொல்லவில்லையா? என்றார். இதை கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். நடேசன், இது தரகரிடம் சொல்ல வேண்டிய விஷயமா? என்றார். அப்போது ஜெயந்தி அம்மா, மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். அதனால் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்றார். இதை கேட்டு சேரன் உடைந்து விட்டார்.

சோழன், உங்களுக்கே நீங்கள் செய்வது நியாயமா? இப்படி கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவதா? என்று கேட்டார். நடேசன், கோபத்தில் கத்துகிறார். சேரனின் பெரியப்பா, அத்தை இருவருமே, இதெல்லாம் ஒரு சம்மந்தமா? இப்படித்தான் எங்களை அவமானப்படுத்துவீர்களா? என்றெல்லாம் கோபப்பட்டார்கள். தரகர் சொல்லி இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். எங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று ஜெயந்தியின் அப்பா சொன்னார். பின் கோபத்தில் சோழன், குடும்பம் எல்லோருமே வந்துவிடுவார்கள். வீட்டிற்கு வரும் வழியில் நடேசனுக்கும், அவருடைய அண்ணன்- தங்கை இருவருக்குமே இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடக்கிறது.
அய்யனார் துணை:
அதற்கு பின் வீட்டிற்கு வந்த நடேசன், இதற்கு தான் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்டாயா? என்று சேரனை திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இப்படி அவசரமாக கல்யாணம் செய்தீர்கள். என்னதான் உங்களுக்கு பிரச்சனை என்றார்கள். அதற்கு
சேரன், எனக்கு கல்யாணம் நடந்தால் தான் பாண்டி கல்யாணம் செய்து கொள்வான் என்று வானதியிடம் சொல்லி இருக்கான். அதனால் தான் இந்த ஏற்பாடு செய்தேன் என்றார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் பாண்டியன் கேட்டார். அதற்கு வானதி, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதனால் கோபத்தில் பாண்டியன், வானதியை திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், என் அண்ணனுக்கு திருமணம் நடக்கும் வரை நம்முடைய கல்யாணம் நடக்காது. நான் நினைக்கும் போது தான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன். உன் வீட்டில் பிரச்சனை என்றால் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டி விடுகிறார். இதைக் கேட்டு வானதியின் அம்மாவும் பயங்கரமாக கோபப்பட்டு பேசுகிறார். வேதனையில் வானதி அழுது கொண்டே உள்ளே சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சேரன், அனீஸ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அனீஸ், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடைய தங்கையை திருமணம் செய்து கொள்வீர்களா? இதற்கு முன்னாடியும் நான் இதைப் பற்றி கேட்டிருக்கிறேன்.

சீரியல் ட்ராக்:
நீங்கள் தான் சிரித்துக்கொண்ட எதுவும் சொல்லவில்லை என்கிறார். உடனே வெட்க்கபட்டு சந்தா உள்ளே சென்று விடுகிறார். சந்தாவுக்கும் தன்மீது விருப்பம் இருப்பதை தெரிந்த சேரனுக்குமே சந்தோசமாக இருக்கிறது. பின் சேரன், சந்தா தன்னுடன் பேசியது நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். இன்னொரு பக்கம் சேரன், எங்கு சென்றிருப்பார்? என்று வீட்டில் உள்ள எல்லோரும் புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சேரன், சந்தோஷமாக சிரித்துக்கொண்டே வருவதைப் பார்த்து யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.






