விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வீட்டில் சேரன் பிறந்த தேதி ஜாதகத்தை பற்றி கேட்டார்கள். அதற்குப்பின் பிறந்த நேரம் தெரிந்தால் ஜாதகம் எழுதிவிடலாம் என்று எல்லோரும் பேசி இருந்தார்கள். அதற்கு நடேசனிடம் சேரன் பிறந்த நேரத்தை கேட்டார்கள். நடேசன், அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் நைட்டில் தான் பிறந்தான். அதை வைத்து ஜாதகம் எழுதிக் கொள் என்று நக்கலாக சொல்லிவிட்டு சென்றார். உடனே சோழன், சேரன் அண்ணனுக்கு ஒரு நல்ல ஜாதகத்தை எழுதி பெண் வீட்டில் கொடுத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார்.

நேற்று எபிசோட்டில் பாண்டியன்- சோழன் இருவருமே ஜாதகம் எழுதும் இடத்திற்கு சென்றிருந்தார்கள். அங்கு ஜோசியரிடம் சோழன், எங்க அண்ணனுக்கு நல்ல யோகம் இருக்குமாறு நீங்களே ஒரு நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுங்கள் என்றார். ஜோசியர் முடியாது என்று சொல்லியுமே சோழன் மிரட்டி எழுத வைத்தார். அதனால் அவர் கோபத்தில் ஏதோ ஒரே ஒரு ஜாதகத்தை எழுதி கொடுத்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த சோழன், ஜாதகம் ரெடி பண்ண விஷயத்தை நிலாவிடம் சொன்னார்.
அய்யனார் துணை:
அதற்குப் பின் சேரனிடம் பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி நிலா சொன்னார். சேரன், முதலில் தயங்கினாலும் பின் வீட்டில் எல்லோரும் சொன்னதால் ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் பெண் வீட்டில் எல்லோருமே சேரன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அவர்கள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை, ஜாதகம், நேரத்தை நம்புகிறார்கள். அப்போது அவர்கள் அழைத்து வந்த ஜோதிடர், சேரனின் ஜாதகத்தை பார்த்தார். அப்போது அவர், இது இப்ப எழுதிய புது ஜாதகமா? என்று கேட்டவுடன் சோழன் பதறிப் போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடிட்ல் சேரனுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், இந்த ஜாதகத்துக்காரருக்கு பெண் தோஷம் இருக்கிறது. இவருக்கு திருமணமே ஆகாது. இவர் இருக்கும் வீட்டில் யாருக்குமே திருமணம் ஆகாது. அப்படியே திருமணமாகி வந்தாலும் அந்த பெண் நிலைத்து நிற்க மாட்டார். இவரால் இந்த குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியமே நடக்காது என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு சேரன் உடைந்து போகிறார். சோழனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். பெண் வீட்டார் உடனே அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
வேதனையில் சேரன் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருக்கிறார். அப்போது சோழன், நான்தான் ஜாதகம் எழுதிட்டு வந்தேன். அது பொய்யான ஜாதகம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தன்னுடைய அண்ணனை சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், சோழன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால், சேரன் கேட்கவே இல்லை இடிந்து போய் உட்காருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






