விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தினர் எவ்வளவு தடுக்க முயன்றுமே முடியவே இல்லை. சந்தாவின் முறைமாமன் துப்பாக்கி வைத்து இருந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பின் சந்தா-அனிஷ் இருவரையும் அவருடைய முறை மாமன் அழைத்து சென்று விட்டார். இதனால் சேரன் ரொம்பவே மனமடைந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணம் நின்றதால் அதிர்ச்சியில் இருந்தார்கள்.

சேரன் திருமணம் நின்று போனதால் ரொம்பவே மனமடைந்து இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனுக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் சேரன்- சந்தாவை நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். சேரன், இனிமேல் என் திருமணத்தை பற்றி யாரும் பேச வேண்டாம். அவர் அவர்கள் வேலையை பாருங்கள் என்றார். வீட்டில் எல்லோரும் சேரனை நினைத்து கவலைப்பட்டார்கள். ஆனால், சேரன் கவலை இல்லாமல் இருப்பது போல நடந்து கொண்டார். இருந்தாலும் உள்ளுக்குள் ரொம்பவே வேதனைப்பட்டார்.
அய்யனார் துணை:
அப்போது சேரனுக்கு போன் செய்த அனிஷ், நாங்கள் பத்திரமாக இருக்கோம். எங்க சொந்த ஊருக்கு போகிறோம். ஆனால், இப்போதைக்கு சந்தாவிற்கு கல்யாணம் செய்ய மாட்டார்கள். கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் பார்த்து கொள்கிறோம். அந்த ஊருக்கு போன உடன் சந்தாவிடம் போனை கொடுக்கிறேன் என்றார். சேரனுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. வீட்டில் எல்லோருமே சந்தாவின் சொந்த ஊருக்கு போகலாமா? என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், நான் வேலைக்கு கிளம்புகிறேன் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனின் மனநிலை மாறும் என்பதற்காக ஒத்துக் கொள்கிறார்கள். பின் சேரனுக்கு துணையாக பாண்டியன் கிளம்பி போகிறார். செல்லும் வழியில் எல்லோருமே சேரனின் திருமணம் நின்று போனதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சேரனுக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது
இன்னொரு பக்கம் சோழன், காதல் ஜோடிகளுக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறார்.

சீரியல் ட்ராக்:
அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய போகும் விஷயம் தெரிந்து கொள்கிறார். பின் சோழன், அவர்களுக்கு உதவி செய்வதாக சொல்கிறார். அதனால் அந்த காதல் ஜோடிகளுமே சந்தோஷப்படுகிறார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவின் தோழி புது ப்ராஜெக்ட் பற்றி கேட்கிறார். நிலாவுமே அந்த ப்ராஜெக்ட்டை எப்படி எல்லாம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் வேலை செய்யும் இடத்தில் சேரனால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. சந்தாவை நினைத்துக் கொண்டிருக்கிறார்.






