விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். சேரன், இப்பதான் பிரச்சனை முடிந்து விட்டதே, பார்க்கலாம் என்று சொன்னார். பாண்டியன், நிலா வீட்டை விட்டுப் போக மாட்டார்கள். நீங்கள் சீக்கிரம் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். பின் பல்லவன், கல்லூரியின் விழா நடப்பதால் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்தார். ஆனால், சேரன் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பல்லவனும் வருத்தத்துடன் கல்லூரிக்கு சென்றார்.

பின் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு போனார்கள். சேரன் மட்டும் வரவில்லை. சேரன் வராததால் பல்லவன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் அனீஸ், மீண்டும் பிரச்சனை வருவதற்குள் நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். சேரன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்போது பாண்டியன், சேரணுக்கு போன் செய்து கல்லூரிக்கு வர சொன்னார்.
அய்யனார் துணை:
சேரனுக்கு போன் செய்த நிலா, சீக்கிரம் கல்லூரிக்கு வர சொன்னார். சேரனும் கல்லூரிக்கு கிளம்ப தயாரானார். இன்னொரு பக்கம் கல்லூரியில் மாணவர்களுக்கு விருதுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பல்லவன் தன் அண்ணன் வராததால் ரொம்பவே சோகத்தில் இருந்தார். அப்போது பல்லவனும் நிறைய போட்டிகளில் வென்றிருந்தார். இதனால் நிறைய மெட்டல்களை வாங்குகிறார். சோழன், பாண்டியன், நிலா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
பல்லவன், சேரனை நினைத்து வருத்தப்பட்டார். பின் சிறந்த மாணவருக்கான டிராபியை பல்லவனுக்கு கொடுத்தார்கள். அதை வாங்கப் போகும்போது சேரன் சரியாக வந்து விட்டார். சேரனை பார்த்தவுடன் பல்லவன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் பல்லவன், நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் என் அண்ணன் தான் என்று சேரனை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். பின் பல்லவன் தன் அண்ணன்கள், நிலாவையும் மேடைக்கு அழைத்து அவர்களை கௌரவிக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன்- சந்தா திருமணத்தை கோலாகலமாக நடத்த சகோதரர்கள் திட்டம் போட்டு இருக்கிறார்கள். வீடே திருவிழா கோலமாக இருக்கிறது. சேரனை மாப்பிள்ளை போல தயார் செய்து அழைத்து வருகிறார்கள். நிலாவும் சந்தாவை அழகாக தயார் செய்து அழைத்து வருகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து குரூப்பாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அதற்குப்பின் கல்யாணத்திற்காக மொத்த குடும்பமும் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கு சேரன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது.






