விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சேரனை பார்த்து உங்களுக்கு அறிவில்லையா? என்றார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிலாம், ராகவிடம் எதற்காக என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சொன்னீர்கள். யார் கேட்டாலும் சொல்லிவிடுவீர்களா? அறிவில்லையா? என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். சேரனால் எதுவுமே பேச முடியவில்லை. கோபத்தில் சோழன், நீங்கள் எதற்காக ராகவிடம் சொன்னீர்கள் என்றார். நிலா, ராகவ் சொன்ன விஷயத்தை எல்லாம் வீட்டில் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார்.

இதைக்கேட்ட சோழன், கொந்தளித்து சேரனை அடிக்க கை ஓங்கி விட்டார். பாண்டியன், அண்ணன் மீது கை எடு என்றார். இதனால் கோபத்தில் சோழன், பாண்டியனை கீழே தள்ளி விட்டார். இதை பார்த்த வானதி கொந்தளித்து சோழனிடம் சண்டைக்கு போனார். அதோடு வானதி, நிலாவை ரொம்பவே காயப்படுத்தி பேசி இருந்தார். இதனால் சோழனுக்கு இன்னும் கோவம் அதிகமானது. பாண்டியன் பிரச்சனை பெரிதாகும் என்று வானதியை அங்கிருந்து அழைத்து சென்றார். பின் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து சேரனை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்கள்.
அய்யனார் துணை:
இன்று எபிசோட்டில் சேரன், தான் வேண்டும் என்று எந்த தவறும் செய்யவில்லை என்று
தன் தம்பிகளிடம் புலம்புகிறார். யாரும் சேரன் சொல்வதை கேட்கவில்லை. கோபத்தில் சோழன் திட்டிவிட்டு
சொல்கிறார். பின் சேரன், சந்தா வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுகிறார்.
இன்னொரு பக்கம் சோழன், ராகவை சந்திக்கிறார். ராகவ், நிலா என்ன சொன்னார்? என்று விசாரிக்கிறார். கோபத்தில் சோழன், நிலா என் பொண்டாட்டி. என் பொண்டாட்டியை காதலிக்கிறாயா? அவளுக்கு மெசேஜ் அனுப்பும் வேலை எல்லாம் நிறுத்தி விடு.

சீரியல் ட்ராக்:
இனிமேல் நிலாவை டார்சல் செய்தால் அவ்வளவு தான் என்று ராகவை அடிக்கிறார். ராகவ், போலீஸ் அழைக்கிறேன் என்கிறார். சோழன் கோபப்பட்டு ராகவை வெளுத்து வாங்குகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், நிலாவிடம் பேசுகிறார். நிலா மீண்டும் ராகவ் சொன்ன விஷயத்தை பற்றி எமோஷனலாக பேசுகிறார். சோழன், நான் கோபத்தில் ராகவை அடித்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு நிலா சந்தோஷப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=My5RCBVNQU0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா ஆபீசுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். சேரன், எவ்வளவு பேசியுமே நிலா கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் சேரன் கையெடுத்துகும்பிட்டு அழுது மன்னிப்பு கேட்கிறார். இதனால் மணமுடைந்த நிலா, நானும் கோபத்தில் உங்களை திட்டி விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று இருவரும் சமாதானம் ஆகி விடுகிறார்கள். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.






