விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நடேசன் வீட்டிற்கு வந்து விட்டார். பின் எல்லோருமே மூவரையும் வழி அனுப்பி வைத்தார்கள். வானதி, வீட்டில் யாரும் இல்லாததால் வேலைகளை செய்ய தொடங்கினார். பின் பாண்டியன், பல்லவன் இருவரும் வேணாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. அதற்குப்பின் வானதி, சமைக்கிறேன் என்று ஒரு பெரிய அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார். பின் வானதி, மளிகை பொருள் எழுதிக் கொடுத்தார். அதை பார்த்து நடேசனுக்கு பயங்கர கடுப்பாகி கிண்டல் அடித்தார். வானதிக்கு உதவி செய்வதற்காக பாண்டியனும் களமிறங்கினார்.

வானதி சமைக்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வேலை செய்து இருந்தார். வானதியின் சமையலை பார்த்து எல்லோருமே பதறுகிறார்கள். நடேசன் சாப்பாடு வேண்டாம் என்று அங்கிருந்து சென்று விட்டார். பல்லவன் பாண்டியன் இருவரும் வானதியின் சமையலை வாயில் வைக்க முடியவில்லை. இருந்தாலும் வானதி,ஏதாவது பிரச்சினை செய்வார் என்று பயத்திலேயே சாப்பிட்டார்கள்.
அய்யனார் துணை:
சாப்பாடு பயங்கர காரம். அதனால் தான் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் தவித்தார். இன்னொரு பக்கம் நிலா, சோழன், சேரன் மூவருமே சந்தாவின் ஊருக்கு சென்று விட்டார்கள். ஆனால், சந்தாவின் வீடு தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் வழி கேட்டுக் கொண்டே சென்றார்கள். ஆனால், யாருமே சரியான பதிலை சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சந்தா, சேரனுடைய நினைவுகளை நினைத்து மாடியில் அழுது கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தாவின், வீடு தெரியாமல் சேரன்,சோழன், நிலா எல்லோருமே தவிக்கிறார்கள். யார் கேட்டாலும் சரியான முகவரி சொல்ல மறுக்கிறார்கள். பின் நேரமானதால் ஓரிடத்தில் தங்கி கொள்ளலாம் என்று சோழன் சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி சமைக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் உள்ள எல்லோரையுமே கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். பின் தான் செய்த வேலைக்காக ஓய்வு தேவை என்று நிலாவின் ரூமில் வானதி படுத்து கொள்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன், பாண்டியன் இருவரும் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வானதி சமைத்து தருகிறேன் என்று மீண்டும் டார்ச்சர் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து நடேசனுக்கு சிரிப்புதான் வருகிறது. பாண்டியன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து போய் நிற்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு ஹோட்டலில் நிலா, சோழன்,சேரன் மூவரும் தங்கி கொள்கிறார்கள். அப்போது நிலாவின் மொபைலுக்கு வக்கீல் மெசேஜ் ஒன்று அனுப்புகிறார். அதில், விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. இருவரும் ஆஜராக வேண்டும் என்று சொல்கிறார். இதைக்கேட்ட உடன் சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. சீக்கிரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும், விவாகரத்து வேண்டாம் என்று சொல்லணும் சோழன் என்கிறார். ஆனால் நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்






