விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்த்தார். இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை. எல்லா இடமும் தேடி அலைந்து சேரன் கிடைக்காததால் வேதனையில் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து நடேசனின் தங்கையும் அவருடைய கணவரும் ஆறுதல் சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அப்போது வந்த நடேசன், தன்னுடைய தங்கை, கணவர் எல்லோரையும் திட்டி விட்டு வெளியே அனுப்பினார். ஆனால், அவர்கள் கோபப்படாமல் சேரன் வீட்டில் ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள்.

அதற்குப்பின் நடேசன், இந்திக்காரப் பெண் வீட்டில் சேரன் இருக்கிறாரா? தேடிப்பார் என்றார். உடனே சேரன் சந்தேகப்பட்டு சந்தாவின் அண்ணாவை பார்த்தார். சந்தாவின் அண்ணாவால் எதுவும்
மறைக்க முடியவில்லை. பின் வேறு வழியில்லாமல் சேரன் தன் வீட்டில் இருக்கும் உண்மையை சொல்லிவிட்டார். அதற்குப்பின் சேரனை பார்க்க சோழன் சென்று விட்டார். அப்போது கோபத்தில் சோழன், வீட்டில் எல்லோருமே அழுது கொண்டிருப்பதை சொன்னார். பின் சேரன், சோழனை கட்டிப்பிடித்து அழுதார்.
அய்யனார் துணை:
சேரனை சமாதானம் செய்து சோழன் வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் எல்லோருமே சேரனை பார்த்து எமோஷனலாக பேசினார்கள். அதற்கு பின் நடேசன், சேரனை கன்னத்தில் அறைந்து என்னுடைய இரண்டு மனைவியும் நான் தான் கொன்று விட்டேன் என்று இந்த ஊர் உலகம் பேசியது. உண்மை எதுவென்று எனக்கு தான் தெரியும். ஜோசியர் சொன்னார் என்று வீட்டை விட்டு போவதா? என்று திட்டினார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே அவரவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சேரன் மட்டும் ஜாதகத்தை நினைத்துதான் கவலைப்படுகிறார். உடனே சோழன், அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபிக்கிறேன் என்கிறார். பின் நான்கு ஜோசியர்களை வீட்டிற்கு வரவைத்து சேரன் ஜாதகத்தை பார்க்க சொல்கிறார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள். ஆனால், நான்கு பேர் குலதெய்வம் கோவிலுக்கு போக சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இதை பார்த்து சேரனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அவர்களை அனுப்பிவிட்ட சோழன், உன்னுடைய ஜாதகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே பொய் என்றெல்லாம் சொல்கிறார். அப்போதுதான் சேரன், நிம்மதி அடைகிறார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். பின் நிலா, குலதெய்வ கோவிலுக்கு போக சொன்னார்கள். போகலாமா? என்று கேட்கிறார். அதற்கு வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






