விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போன முறை சேரன் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டார். இந்த முறை யாரும் தூங்காமல் சேரன் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு சோழனுக்கு கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி சோழன் தன்னுடைய மற்ற இரண்டு தம்பிகளிடம் சொன்னார். அவர்களுமே தன் அண்ணனை பார்த்துக் கொள்வதற்கு சம்மதித்தார்கள். ஆனால் சேரன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

சேரன் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவாரோ என்று பயத்தில் அவருடைய மூன்று தம்பிகளும் பிளான் பண்ணி தூங்காமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தார்கள். முதலில் பாண்டியன் தான் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சோழன்-பல்லவன் இருவரும் தூங்கிவிட்டார்கள். பின் தன்னுடைய நேரம் முடிந்துவிட்டு சோழனை பாண்டியன் எழுப்பினார். ஆனால், சோழன் எழவே இல்லை. பல்லவநனும் எழுப்ப எழுப்ப நன்றாக தூங்கி கொண்டு இருந்தார். பின் வேறு வழியில்லாமல் வாசலின் கதவில் காலை வைத்து கொண்டு சேரன் வெளியே போக முடியாத அளவு பாண்டியன் தூங்கி விட்டார்.
அய்யனார் துணை:
மறுநாள் காலையில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். அதற்கு அனீஸ், சந்தாவை பெண் கேட்ட விஷயத்தை பற்றி சோழனிடம் சொன்னார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், சந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் சோழனுக்கு தலைகால் புரியவில்லை, சந்தோஷத்தில் வீட்டிற்கு வருகிறார். பின் வீட்டில் சேரன், அண்ணன் இப்படி இருப்பதற்கு காரணம் தெரிந்து விட்டது என்று அனீஸ் சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அந்த சமயம் பார்த்து சேரன் வீட்டிற்கு வருகிறார். அப்போது சேரனிடம் சந்தாவை பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். வெட்கத்தில் சேரன் அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டுகிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் வழக்கம் போல வலிந்து பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது






