விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா விவாகரத்து பற்றிய பேசிக் கொண்டிருப்பதால் சோழனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்கு பின் சோழன் வேண்டுதல் என்று கோயிலை சுற்றி அங்கபிரதசனம் செய்தார். நிலா, எதற்கு என்று கேட்டார். அதற்கு சோழன், நீங்கள் உங்க அப்பா அம்மாவுடன் சேர வேண்டும் என்று சொல்வதால் நிலா திட்டி விட்டார். கடைசியில் சோழனின் இடுப்பு எலும்பு உடைந்தது தான் மிச்சம். அதற்குப்பின் நிலா வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது நிலா மீண்டும் அந்த போலீசுக்கு போன் செய்து பேசி இருந்தார். அந்த போலீஸ் நேரில் வர சொன்னார். நிலாவுமே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு கிளம்பினார். அப்போது ராகவ், நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன். உங்களை நானே கொண்டு போய் விடுகிறேன் என்றார். பின் ராகவ், நிலாவை பற்றி எல்லாம் விசாரித்தார். ஏதேதோ பதிலை சொல்லி நிலா சமாளித்தார். இன்னொரு பக்கம் நிலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன நிலா, நாங்கள் விவாகரத்து செய்யும் விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றார். அதற்கு அந்த போலீஸ், சோழன் வந்து சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். அது மட்டும் இல்லாமல் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணுவதற்கு ஆதார் கார்டு கொடுத்த விஷயத்தையும் சொன்னார். ஆதார் கார்டு தேவை என்றபோது சோழன் இல்லை என்று நடித்தது எல்லாம் நினைத்து பார்த்து நிலா ரொம்பவே கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சோழன், நிலாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக தயார் செய்தார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் நிலாவை, ராகவ் வீட்டில் கொண்டு வந்து விடுகிறார். ராகவை பார்த்தவுடன் சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் வீட்டினல் நிலாவின் பிறந்தநாள் ஏற்பாடுகளை பார்த்து ராகவ் சர்பரைஸ் ஆகிறார். ஆனால், நிலா கடும் கோபத்தில் இருக்கிறார். மீண்டும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். நிலா, உண்மையை வெளியே சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பிறகு நிலாவின் பிறந்தநாளுக்கு வந்த வானதி கிப்ட் கொடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சந்தாவும், நிலாவின் பிறந்தநாளுக்காக வீட்டிற்கு வந்து கிப்ட் கொடுத்து வாழ்த்து சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிலா மட்டும் சோழன் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அதற்குப்பின் சோழன், தன்னுடைய தம்பிகளிடம் தன் காதலை சொல்ல போகும் விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த நிலா, வெளியில் போகலாமா என்று சொல்கிறார். சோழனும் சரி என்கிறார். பின் நிலா-சோழன் இருவருமே பீச்சுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு தன்னுடைய காதலை சொல்ல சோழன் தயாராக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






