விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தான் வேண்டும் என்று எந்த தவறும் செய்யவில்லை என்று தன் தம்பிகளிடம் புலம்பினார். யாரும் சேரன் சொல்வதை கேட்கவில்லை. கோபத்தில் சோழன் திட்டிவிட்டு சொன்னார். பின் சேரன், சந்தா வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுதார். இன்னொரு பக்கம் சோழன், ராகவை சந்திக்கிறார். ராகவ், நிலா என்ன சொன்னார்? என்று விசாரித்தார். கோபத்தில் சோழன், நிலா என் பொண்டாட்டி. என் பொண்டாட்டியை காதலிக்கிறாயா? அவளுக்கு மெசேஜ் அனுப்பும் வேலை எல்லாம் நிறுத்தி விடு.

இனிமேல் நிலாவை டார்சல் செய்தால் அவ்வளவு தான் என்று ராகவை அடித்தார். ராகவ், போலீஸ் அழைக்கிறேன் என்றார். சோழன் கோபப்பட்டு ராகவை வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், நிலாவிடம் பேசி இருந்தார். நிலா மீண்டும் ராகவ் சொன்ன விஷயத்தை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். சோழன், நான் கோபத்தில் ராகவை அடித்து விட்டேன் என்றார். இதை கேட்டு நிலா சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
சேரன், நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார். சோழனும் தன் அண்ணன் செய்த தவறை மன்னித்து விடுகிறார். ஆனால், நிலா மட்டும் கோபத்தில் இருக்கிறார். சேரன் எவ்வளவு மன்னிப்பு கேட்டும் நிலா மனம் இறங்கவில்லை. கடைசியில் சேரன் கையெடுத்து கும்பிட்டு
எமோஷனலாக கதறி அழுகிறார். உடனே நிலா, நானும் கோபத்தில் திட்டி விட்டேன் என்று இருவருமே சமாதானமாகி பழையபடி அண்ணன்- தங்கையாக மாறிவிடுகிறார்கள். அதற்குப்பின் ரூமுக்குள் பாம்பு வந்ததால் நிலா பயத்தில் கத்துகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி போய் பார்க்கிறார்கள். ஒரு வழியாக பாம்பை துரத்தி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
வீடு முழுக்க ஓட்டைகள் இருப்பதால் பாம்பு வருகிறது என்று வீட்டை சரி செய்ய நினைக்கிறார்கள். அதற்குப்பின் சோழன்- நிலா இருவரும் கிளம்பி போகிறார்கள். அப்போது சோழன்,ராகவ் ஏதாவது தொல்லை செய்யப் போகிறான். அங்கே வேலை செய்யனுமா என்று கேட்கிறார். நிலா, எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் முக்கியம். பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதுவும் ராகவிடம் சண்டை போட வேண்டாம் என்கிறார். அதற்குப்பின் வீட்டை சரி செய்யும் வேலையை சேரன், சோழன், பாண்டியன் மூவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது போன் செய்த வானதியிடம் பாண்டியன் பாம்பு வந்த விஷயத்தைப் பற்றி சொல்கிறார். பொறாமையில் வானதி, நிலாவை திட்டுகிறார்.
https://www.youtube.com/watch?v=UpvmQjdVJbU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அண்ணன், தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சரி செய்கிறார்கள். இதை அறிந்த நடேசனின் அண்ணன், தங்கை இருவரும் போலீசில் புகார் கொடுத்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்த போலீஸ், கோர்ட்டில் கேஸ் நடப்பதால் இந்த வீட்டில் யாரும் இருக்கக்கூடாது. வெளியே போக சொல்கிறார். இதனால் நடேசன் குடும்பம் எல்லோருமே தங்களுடைய பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்கள்.






