தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். தற்போது இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய 50 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைந்தது அடுத்து விழாவும் நடத்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை பாக்கியராஜ் காலமாகி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
பாக்கியராஜ் மறைவு:
மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்நிலையில் பாக்யராஜ் நடத்தி வந்த பாக்கியா இதழில் ஆசிரியர் பிரிவில் பணிபுரிந்த தஞ்சை ரவி ராஜ் அளித்த பேட்டியில், பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குனராக இருந்த செம்புலி ஜெகன் பாக்கியா பத்திரிக்கை பணிக்கு பத்திரிக்கையில் அனுபவம் மிக்க ஒருத்தர் வேணும் என்று டைரக்டர் கேட்டார் என்று என்னை அழைத்து சென்றார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமராவதி இல்லத்துக்கு போனேன். வீட்டுக்கு அம்மா பெயரை வைத்திருந்தார். முதன்முதலாக என்னை சந்தித்த அவர், எந்த படத்தில் வேலை செய்திருக்கீங்க? யாருடைய அசிஸ்டன்ட் என்று தான் கேட்டார்.

ரவிராஜ் பேட்டி:
உதவி இயக்குனர் பணிக்கு வந்திருக்கிறதா? நினைத்துக் கொண்டார் பத்திரிக்கைக்கு வந்திருக்கேன்னு சொன்னதும் நீங்க ஜெயலலிதா மேடத்திடம் செக்யூரிட்டியா இருந்திங்கன்னு ஜெகன் சொன்னார். மேடத்தை பற்றி ஏதாவது எழுதுங்கன்னு சொல்லி அவரே டைட்டிலையும் தந்தார். 20 அத்தியாய்களுக்கு மேல் அந்த தொடர் போனது. தொடர் நல்ல வரவேற்பு பெற்றது. அவருடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். பாக்கியாவில் கேள்வி பதில் அவர்தான் எழுவார். நக்கல் நையாண்டின்னு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். ஜோக்ஸ் எல்லாம் சமயத்தில் அவரே எழுதுவார்.

பாக்கியராஜ் குணம்:
வேலை செய்கிற ஊழியர்களுக்கு வீட்டு சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு பரிமாறுபவர்கள் சாப்பிட்டு தான் பரிமாறனும் என்பார். பசங்க பாண்டிராஜ் பாக்யாவில் வேலை பார்த்தவர் தான். தன்னுடைய உதவியாளர்களை முருகா என்று தான் அழைப்பார். அவங்க பேர் வேற என்னவாக இருந்தாலும் முருகான்னு தான் கூப்பிடுவார். முருகர் பக்தர் என்பதாலே அவர் அப்படித்தான் தன்னிடம் வேலை செய்பவர்களை கூப்பிடுவார். மூணு நாள் முன்னாடி நான் அவரிடம் பேசி இருந்தேன். குஷ்பூ மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வந்த பிறகு வாங்க ஒரு புத்தகம் கொண்டு வரும் விஷயமாக பேசணும் என்று சொல்லி இருந்தார். அதற்குள் இப்படி ஒரு துயர செய்தி, தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்று எமோஷனாக அழுதார்.





