தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். தற்போது இவருடைய மறைவு செய்திதான் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரையும் பாக்கியராஜ் மறைவு செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.

முதலில் இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார். இவர் இயக்கிய பல வெற்றி படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழி படங்களையும் இயக்கியும் நடித்திருக்கிறார்.
பாக்கியராஜ் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இவருடைய 50 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைந்தது அடுத்து விழாவும் நடத்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை பாக்கியராஜ் காலமாகி இருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் பேரதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இவர் இன்று வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருக்கிறார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு தான் இவருடைய குருவான பாரதிராஜா காலமாகி இருந்தார். 17 நாட்களிலேயே குருவை தொடர்ந்து சிஷ்யன் பாக்கியராஜ் இறந்திருப்பது தமிழ் திரையுலகை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பாக்கியராஜ் மறைவு:
மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், என்னுடைய வாழ்க்கை இங்குதான் தொடங்கியது. நான் பாக்கியராஜ் சாரிடம் உதவி இயக்குனராக சேர வந்தேன். அப்போது நான் வீட்டு வாசலில் தான் இருப்பேன். அவரை சந்திக்க வள்ளுவர் கோட்டம் வரை கூட்டம் இருக்கும். அப்போது அவருக்காக கொடுக்கும் மாலைகள், கூட்டத்தை சமாளிப்பது என்று நான் ஒரு அசிஸ்டன்ட் பாயாக செய்திருப்பேன். இப்பவும் அதை தான் நான் செய்கிறேன். அவருக்காக இதை செய்வதை நான் பெருமையாக பார்க்கிறேன். சிஎம் விஜய் வந்தபோது நான் இதை தான் செய்தேன்.

பார்த்திபன் பேட்டி:
அப்போது நான், எல்லாமே எனக்கு அவர்தான் என்று சொன்னேன். உடனே சிஎம் விஜய், அவருக்கும் நீங்கள் தானே எல்லாமே என்று சொன்னார். என்னால் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 17 நாட்களுக்கு முன் தான் அவருடைய குரு பாரதிராஜா மறைந்தார். அந்த துயரம் தாங்க முடியாத போது என்னுடைய குரு இறந்துவிட்டார். நான் அவருடைய சிஷ்யனாக இருந்து நிறைய படைப்புகளை கொடுத்து அவருக்கு இன்னும் பெருமை சேர்ப்பேன். நாளை காலை 9 மணிக்கு அவருடைய இறுதி ஊர்வலம் நடக்கிறது. இது என்னுடைய வாழ்க்கையின் துக்க நாள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி கதறி அழுகிறார்.






