விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். அதற்கு அனீஸ், சந்தாவை பெண் கேட்ட விஷயத்தை பற்றி சோழனிடம் சொன்னார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

சேரன், சந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் சோழனுக்கு தலைகால் புரியவில்லை, சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்தார். பின் வீட்டில் சேரன், அண்ணன் இப்படி இருப்பதற்கு காரணம் தெரிந்து விட்டது என்று அனீஸ் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து சேரன் வீட்டிற்கு வந்தார். அப்போது சேரனிடம் சந்தாவை பற்றி எல்லோரும் விசாரித்தார்கள். வெட்கத்தில் சேரன் அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் வழக்கம் போல வலிந்து பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, பல்லவன் இருவருமே பஸ் ஸ்டாண்டுக்கு போகிறார்கள். காயத்ரி, சோழனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சோழன் அவர்களுடன் வரவில்லை என்றவுடன் நிலாவிடம் விசாரிக்கிறார். ஆனால், நிலா எதுவும் தெரியாது என்று சொல்லிவிடுகிறார். அந்த சமயம் பார்த்துச் சோழன் வருகிறார். சோழன், காயத்ரியுடன் பேசுவதை பார்த்து கோபப்பட்ட நிலா அங்கிருந்து ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். பின் பல்லவனிடம் சோழன், நிலா என்னிடம் வருவதற்காகத்தான் நான் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பல்லவன், தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ள போகிறாய் என்றெல்லாம் எச்சரிக்கிறார். இன்னொரு பக்கம் நிலா ப்ராஜெக்ட்டை நல்லபடியாக செய்து முடித்ததால் ராகவ் ட்ரீட் கொடுப்பதற்காக லாங் டிரைவ் அழைக்கிறார். ஆனால், நிலா முடியாது என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி வழக்கம் போல பாண்டியன் கடைக்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சோழன், உங்கள் இருவருக்கும் இடையே என்ன ஞ்சாயத்து என்கிறார். அப்போது வானதி, சேரன் திருமணம் தொடர்பாக நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார். கோபத்தில் பாண்டியனும் கத்துகிறார். பின் சோழன், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து சண்டை போடாதீர்கள் என்று இருவரையும் சமாதானம் செய்து வைக்கிறார்.






