விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவின் அப்பா, உனக்கு வேலை தான் முக்கியம் என்றால் நாங்களும் சென்னையில் உன் உடன் தங்குகிறோம். அவர்கள் வீட்டில் வேணாம் என்றார். இதனால் நிலா ஒத்து கொண்டார். பின் அய்யனார் வீட்டிற்கு வந்த நிலாவின் அப்பா, நிலாவுடன் சென்னையிலேயே தங்கும் விசயத்தை சொன்னார்கள். சோழன், அதெல்லாம் நிலாவை இங்கிருந்து அனுப்ப முடியாது என்றார். நிலா எதுவும் பேசாமல் தன்னுடைய துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வந்தார். சோழன் எமோஷனலாக அழுதார். நிலாவின் அப்பா தாங்கள் தங்கி இருக்கும் வீட்டு அட்ரஸை சிலரிடம் கொடுத்து விட்டு சென்றார்.

நிலா வீட்டை விட்டு போனதால் சோழன் ரொம்பவே எமோஷனலாக உடைந்து போயிருந்தார். நடேசன் வேண்டும் என்று சோழனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோழன், நடேசனை அடிக்க வந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுக்க, கலவரமே வெடிக்கிறது. அந்த சமயம் நிலாவின் அப்பா மீண்டும் சோழன் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், இதனால் தான் என் மகளை இங்கு விடக்கூடாது என்று சொல்கிறேன். எப்படியாவது நான் நிலாவை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்று விடுவேன் என்றார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதியிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் வானதி, தன்னுடைய தோழிகளிடம் வெளியே செல்வதால் பாண்டியனை வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அதற்கு பின் நிலாவிற்காக அவருடைய அம்மா பார்த்து பார்த்து சமைத்து வைத்தார். நிலா தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்தாலும் சோழன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சோழன், நிலாவிற்காக பரோட்டா வாங்கி வந்து தந்தார். நிலா, தன் அம்மா சமைத்த சமையலை சாப்பிடாமல் சோழனுடன் சேர்ந்து அவர் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவின் அம்மாவிற்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, சோழலுடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மனோகர் கோபப்படுகிறார். சோழன் சென்ற பிறகு நிலாவின் பெற்றோர்கள், சோழனை உனக்கு பிடிக்குமா? என்று கேட்கிறார்கள். நிலா, ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். நிலாவின் அம்மா, எதற்காக விவாகரத்து செய்தாய்? என்று கேட்கிறார். நிலாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சோழன், நிலா தன்னிடம் ரொம்ப சகஜமாக பேசியதை எல்லோரிடமும் சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் போனில் நிலா- சோழன் இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொள்கிறார்கள். நிலாவும் தன்னை புரிந்து கொண்டு காதலிக்க விடுவாள் என்று சோழன் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் பாண்டியன், வானதியின் தோழிகள் அவர்களுடைய காதலனுடன் வருவதால் தன்னையும் வானதி வர சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறார். இதனால் சோழன்- பல்லவன் இருவருமே பாண்டியனை அழகாக ரெடி பண்ணுகிறார்கள். பின் சேரன், சந்தாவுடன் போனில் பேசி கொண்டு சந்தோஷப்படுகிறார்.






