விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் படுத்திருப்பதால் அவருக்கு உடம்பு முடியாமல் போகிறது. பின் நிலா, அவரைத் திட்டி உள்ளே தூங்க வைத்தார். நடேசன், நிலா மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததால் தான் வீடு வீடாகவே இருக்கிறது. சோழன் ஒழுங்காக நிலாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழியை பார்க்க சொல் என்று சேரனிடம் அறிவுரை சொன்னார். மறுநாள் காலையில் பாண்டியன் கடை திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள எல்லாருமே தயாராகி சென்றாகள்.

வீட்டில் எல்லோருமே கிளம்பி கடைக்கு வந்தார்கள். கடையை பாண்டியன் ரொம்ப அழகாக தயார் செய்து வைத்திருந்தார். பின் கடைக்கு சேரன் மெக்கானிக் ஷாப் என்று பெயர் வைத்து இருந்தார் பாண்டியன். அதை பார்த்து நிலா- சோழன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். பின் சேரனை அழைத்து வந்து கடையின் பெயரை காண்பித்தார்கள். அதை பார்த்தவுடன் சேரன் எமோஷனாக கண்கலங்கி விட்டார். பின் சேரன், எதற்காக என் பெயரை வைத்தாய்? அப்பா, அம்மா, பல்லவன் பெயரை வைத்திருக்கலாம் என்றார்.
அய்யனார் துணை:
அதற்கு பாண்டியன், எங்களை சின்ன வயதில் இருந்து வளர்த்தது நீங்கள் தான். நாங்கள் இப்படி இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்றார். வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வானதி வந்தார். கடைக்கு தன் அண்ணன் பெயரை வைத்திருப்பதை பார்த்து கோபப்பட்டார். பின் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் வானதி அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் சந்தா, அனீஸ் இருவரும் கடைக்கு வருகிறார்கள். சந்தாவை பார்த்து சேரன் ரொம்பவே வெட்கப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன் பனியில் தூங்கி கொண்டிருந்ததால் நிலா அவரை உள்ளே படுக்க செல்கிறார். அதற்குப் பின் நிலா, நாளை கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்க இருக்கிறது. இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொல்கிறார். சோழன் ரொம்பவே ஷாக் ஆகிறார். அதற்கு பின் சோழன், கண்டிப்பாக விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, எனக்கு விவாகரத்து வேண்டும். உங்களுடன் சேர்ந்து வாழ சொல்கிறீர்களா? என்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதைக் கேட்டவுடன் சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். அடுத்த நாள் நிலா-சோழன் இருவரும் கோர்ட்டுக்கு செல்கிறார்கள். அங்கு விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வேண்டுமா? என்று கேட்கிறார். நிலா பதில் சொல்வதற்கு முன் சோழன் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு நிலா ஷாக் ஆகிறார். அதற்குப்பின் நீதிபதி, நிலாவிடம் விசாரிக்கிறார். நிலாவும் ஆமாம் என்று சொல்லிவிடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






