விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, ஓனருமே ஏற்றுக் கொண்டார். சோழன், தன் ஓனர் காலில் விழுந்து எமோஷனலாக அழுது மன்னிப்பு கேட்டார். ஓனர், சோழனை மன்னித்து விட்டார். பின் ஓனர், நிலா அசிங்கப்படவில்லை என்று நினைக்கிறாயா? இப்போதுதான் நிலாவிற்கு அசிங்கம். உனக்காக அவள் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் என்று சொன்னார். இதனால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் நிலா-சோழன் இருவரும் நடந்து வீட்டிற்கு வந்தார்கள்.

அப்போது சோழன், தன்னுடைய காதலையும் தன்னுடைய ஆசையும் சொல்லி அழுதார். நிலாவுமே சோழனுடைய எமோஷனை புரிந்து கொண்டு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி அழுதார். வீட்டில் எல்லோருமே சோழனுக்கு ஆறுதல் சொன்னார்கள். அதற்குப்பின் சேரன், எல்லா வீட்டு வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தார். பாண்டியன் அவருக்கு உதவி செய்தார்.
அய்யனார் துணை:
இன்று எபிசோட்டில் பாண்டியன், பல்லவனிடம் பேச சொல்கிறார். ஆனால், சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் நிலா-சேரன் இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள். பின்னர் சோழன் நடந்ததை நினைத்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சோழனுக்கு ஓனர் போன் செய்து ஒரு வாடைக்குப் போக சொல்கிறார். ஆனால், சோழனுக்கு மனசே இல்லை.

சீரியல் ட்ராக்:
அப்போது வானதி வருகிறார். சோழனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட சோழன், தான் திருடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் வானதி ஷாக் ஆகிறார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை தனியாக அழைத்துச் சென்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். வானதி, சோழனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சொல்கிறார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன் ட்ரிப் போகும் விஷயத்தை சொல்கிறார். நிலா நானும் அந்த ட்ரிப்புக்கு வருகிறேன் என்றார். இருவரும் செல்ல தயாராகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=CNWybb5wDi0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் நிலா, சோழன் இருவருமே ட்ரிபுக்கு வருகிறார்கள். அப்போது சோழன், ஒரு வயதான ஜோடியை அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது அவர்கள் காதல் கதையை பற்றி விசாரிக்கிறார்கள். சோழன், தங்களுடைய காதல் கதையை எடுத்து விடுகிறார். நிலா முறைக்கிறார். இருந்தாலும் சோழன் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் அந்த வயதானவர்கள், நீங்களும் எங்களைப் போலவே வயதான காலத்தில் உங்கள் காதல் கதையை சொல்லணும் என்கிறார். அதற்கு நிலவும் சரி என்கிறார். பின் சோழன், உண்மையாலுமே நாம் இருவரும் கடைசிவரையும் சேர்ந்து இருப்போமா? என்று கேட்கிறார். நிலா, இதை நான் சும்மா சொன்னேன் என்கிறார்






