விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவிடம், பல்லவன் தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்று தேவையில்லாத வேலை எல்லாம் செய்தார். இதனால் சந்தா கோபப்பட்டு பல்லவனை அடிக்க போனார். இன்னொரு பக்கம் நிலா, சோழன் இருவருமே காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, காயத்ரி வீட்டிற்கு போக வேண்டும் என்றார். சோழன் முடியாது என்று மறுத்தார். பின் நிலா கட்டாயப்படுத்தி தான் சோழனை காயத்திரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு சோழன், தான் செய்த தவறை உணர்ந்து காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டார். காயத்ரி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

காயத்ரி, நான் அதை எல்லாம் மறந்து விட்டேன். நீங்கள் அதைப் பற்றி யோசிக்காதீர்கள் என்றார். பின் சோழன், மீண்டும் காயத்ரியிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வந்து விட்டார். நிலாவுமே காயத்ரிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் காரில் சோழன், நான் செய்த தவறை நினைத்து தினமும் குற்ற உணர்ச்சியில் இருந்தேன். ஆனால், இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. ரொம்ப நன்றி என்று கையெடுத்து கும்பிடுகிறார். அதற்குப் பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது சோழன், இனிமேல் இந்த சோழன் யோகியன், நேர்மையானவன், நல்லவன் என்றெல்லாம் பெருமையாக பேசினார். அந்த சமயம் பார்த்து போன் செய்த ஓனர், எதற்காக பெண்களிடம் வலிந்து பேசுகிறாய், வம்பு இழுக்கிறாய். இரண்டு பெண்கள் உன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். இப்படியே போனால் உன்னுடன் யாரும் சவாரி வர மாட்டார்கள் என்று வெளுத்து வாங்கினார். இதையெல்லாம் கேட்டு நிலா முறைத்துக் கொண்டிருந்தார். சேரன், பாண்டியன் எல்லோருமே கோபப்பட்டார்கள். அதற்குப்பின் நிலா, பல்லவனுக்காக ஒரு வாட்ச் வாங்கிக் கொடுத்தார். அதை பார்த்து பல்லவன் ரொம்பவே சந்தோசப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோழன், அந்த பெண்கள் வேண்டுமென்று என் மீது பொய் சொல்லி இருக்கிறார்கள். நான் அப்படி இல்லை என்றெல்லாம் சொல்கிறார். உடனே நிலா, நீங்கள் என்ன பண்ணாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இனிமேல் எந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் பாண்டியன், பல்லவன், சேரன் மூவருமே சோழன் செய்த தவறை சுட்டிக்காட்டி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேரன், நிலா மாதிரி ஒரு தங்கமான பெண் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்ணின் மனதை மாற்ற நீ முயற்சி செய்யவில்லை. தேவையில்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருகிறாய்.

சீரியல் ட்ராக்:
நிலா மட்டும் இல்லையென்றால் நீ பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பாய் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். பின் மறுநாள் சேரன் கோயிலுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போகிறார். அப்போது சேரன், இனி எந்த பெண்ணிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன். எல்லோருமே அக்கா தங்கை தான் என்று சொல்லி சூடத்தின் முன்பு சத்தியம் செய் என்று சொல்கிறார். சோழன் தயங்கி தயங்கி நிற்கிறார். சேரன் மிரட்டுவதால் சோழன் சத்தியம் செய்யப் போகிறார். அப்போது எதிரில் ஒரு பெண் தேங்காய் உடைக்க தடுமாறிக் கொண்டிருப்பதை சோழன் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார். வேறு வழி இல்லாமல் சத்தியம் செய்துவிட்டு சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொல்கிறார்.






