விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், வானதியின் வீட்டிற்கு சென்றார். ஆனால், வானதி வீட்டுக்குள் போகாமல் வெளியேவே நின்று கொண்டிருந்தார். வானதி, ஏதாவது சொல்லுவாள் என்று அங்கிருந்து பாண்டியன் கிளம்பி வந்து விட்டார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக சோழன்- நிலா இருவரும் தயார் ஆகிறார்கள். அப்போது நிலாவை சந்தித்து சேரன் பேசி இருந்தார். நிலா, பயப்படாதீர்கள் நான் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள் என்றார். சேரனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

நிலா-சோழன் இருவருமே கோர்ட்டுக்கு சென்றார்கள். சோழன், நிலா எப்படியும் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். நிலாவுமே விவாகரத்து வேண்டாம். சோழனுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். அதற்குப்பின் கோர்ட்டில் தங்களுக்கு திருமணம் செய்து வைத்த போலீசை சோழன் சந்தித்தார். சோழனும் அந்த போலீசும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை நிலா ஒளிந்து நின்று கேட்டார். அப்போது சோழன், தங்களுடைய திருமண கதையும், அதனால் செய்த பித்தலாட்ட வேலை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
அந்த போலீஸ், சோழனுக்கு அறிவுரை சொல்லி நிலாவுடன் சேர்ந்து வாழ சொன்னார். இதை எல்லாம் கேட்டு நிலாவிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. பொய் சொல்லி ஏமாற்றி தான் சோழன் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்து கொண்டு நிலா ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் அவரின் பெற்றோர்கள் திருமணத்திற்கான வேலைகள் செய்து கொண்டு இருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நீதிபதி, விவாகரத்து வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கிறார். சோழன், வேண்டாம் என்று சொல்வதற்குள் நிலா, விவாகரத்து வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். சோழனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நீதிபதி இருவருக்கும் விவாகரத்து கொடுத்து விடுகிறார். பின் அங்கிருந்து நிலா வேகமாக கிளம்பி வருகிறார். சோழன், எதற்காக இப்படி சொன்னீர்கள்? என்று கேட்கிறார். நிலா, என்னை ஏமாற்றி தான் நீங்கள் கல்யாணம் செய்தீர்கள் என்று போலீஸிடம் பேசுவதை நான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு மோசமானவரா நீங்கள் என்று நடுரோட்டிலேயே கத்துகிறார்.

சீரியல் ட்ராக்:
சோழன் கொஞ்சி கதறுகிறார். பின் ஆட்டோவில் ஏறி நிலா கிளம்பி விடுகிறார். உடனே சோழன், கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சேரனிடம் சொல்கிறார். சேரன், பாண்டியனை வீட்டிற்கு வரவைக்கிறார். பாண்டியன் கிளம்பியுடன் வானதி அந்த இடத்திற்கு வருகிறார். அப்போது பாண்டியனிடம் வேலை செய்பவர், நீ வேறொரு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷத்துடன் பாண்டியன் அவுட்டிங் போகிறான். என்று சொல்கிறார். அதை கேட்டு வானதிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த நிலா ரூமுக்குள் சென்று சோழன் சொன்னது எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். .






