விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதியின் வீட்டில் அவருடைய அம்மா பயங்கரமாக போட்டு அடித்தார். பின் வானதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வீட்டையும் பூட்டி போனை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா பேசியதையும் பாண்டியன், வானதி பேசியதையும் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அந்த சமயம் போன் செய்த வானதி, பாண்டியன் இடம் ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நிலா, எதற்காக இந்த முடிவு எடுத்தீர்கள்.

அதுவும் சோழனுடன் என்னால் இங்கு இருக்க முடியாது. ஊர் பேசுவதற்காக நம் வாழ்க்கை வாழ முடியாது என்றெல்லாம் சொல்வதால் சேரன் தன் முடிவை மாற்றி கொண்டார். பின் சோழன், இதை தான் நான் எதிர்பார்த்தேன். நான் அசிங்கப்பட்டது சந்தோஷம் தானே என்று தன்னுடைய அண்ணனிடம் சொன்னார். அதற்குப்பின் பாண்டியன், வானதி நியாபகமாக இருப்பதாக சொன்னார். உடனே சோழன், பாண்டியனை அழைத்துக் கொண்டு வானதி வீட்டிற்கு போனார். அங்கு வானதியை எப்படியோ வரவைத்து பாண்டியன் இடம் பேச வைத்தார் சோழன்.
அய்யனார் துணை:
வானதி- பாண்டியன் இருவரும் பேசுவதை பார்த்து வானதி அண்ணன் அடித்து வானதியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார். வீட்டில் அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே வானதியிடம் சண்டை போட்டார்கள். வானதி, நான் பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்வேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இருந்தாலும் வானதியை அவர் அம்மா அடித்துக் கொண்டிருந்தார். அவர் அப்பா எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியை பார்க்க சென்ற விஷயத்தை பாண்டியன் வீட்டில் சொன்னவுடன் நிலா திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வானதியின் அம்மா, அவருடைய அண்ணனும் போட்டு அடிக்கிறார்கள். பாண்டியனை மறந்து இருப்பது என்றால் இந்த வீட்டில் இரு, இல்லை என்றால் வெளியே போ என்று சொல்கிறார்கள். இதனால் வானதி தன்னுடைய பெற்றோர்களின் பேச்சை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து பாண்டியன் வீட்டிற்கு வந்துவிடுகிறார். என்ன நடந்தது என்று பாண்டியன் வீட்டில் விசாரிக்கிறார்கள். அப்போது வானதி வீட்டில் நடந்ததை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே சோழன், இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொல்கிறார். ஆனால், நிலா- சேரன் இருவரும் யோசித்து முடிவெடுக்கலாம் என்று சொல்கிறார். பின் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆகாமல் எனக்கு வேண்டாம் என்றெல்லாம் யோசிக்கிறார். ஆனால், வானதி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறார். பின் சேரன்- நிலா, இருவருமே எதுவாக இருந்தாலும் சீக்கிரம் முடிவெடுங்கள் என்கிறார். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவருமே தனியாக பீச்சுக்கு சென்று பேசுகிறார்கள். அப்போது பாண்டியன், தன் மனதில் இருக்கும் காதலை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






