விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி பாண்டியன், சேரன் இருவரும் நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் ரொம்ப சந்தோசமாக சிரித்துக்கொண்டு நிலாவிடம் பேசுவதை வானதி பார்த்து விட்டார். இதனால் நிலாவின் மீது வானதிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்காக ஒரு வாட்சை கிப்டாக கொடுத்தார். பின் ராகவ் அதை ஸ்டேட்டஸிலும் வைத்திருந்தார். அதை சோழன் பார்த்துவிட்டு பயங்கரமாக கோபப்பட்டார்.

சோழன், ராகவ் செய்த வேலையால் ரொம்பவே கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த சோழன் புலம்பி கொண்டிருந்தார். நடேசன், தான் வாங்கி வந்த சாப்பாட்டை சோழனுக்கு கொடுத்து சாப்பிட சொன்னார். அப்போது சோழன், ரொம்ப எமோஷன் ஆக தன்னுடைய வாழ்க்கையை பற்றி புலம்பி கொண்டிருந்தார். நடேசன் அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்குவதற்க்கு பெங்களூர் கிளம்பினார். அந்த சமயம் வந்த வானதி, நானும் பெங்களூர் வருகிறேன் என்று அடம் பிடித்தார்.
அய்யனார் துணை:
பாண்டியன் வேண்டாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. ஒரு வழியாக வானதி பாண்டியனுடன் வந்தார். பின் பாண்டியன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வானதி, நேரமாகிவிட்டது வீட்டிற்கு போகவேண்டும் என்று சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், இதனால் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். இதற்காக மீண்டும் காசு போட்டு செலவு செய்து வர முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் போகணும் என்று கருதுகிறார். வானதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி வீட்டிற்கு போகவேண்டும் என்று அவசரப்படுவதால் பாண்டியன் கடுப்பாக்கி திட்டி விடுகிறார். பின் போன வேலையும் முழுவதுமாக முடிவடையாதல் தான் பாண்டியன் கோபத்திலேயே சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராகவ் தான் கொடுத்த வாட்ச்சை கட்டவில்லை என்று நிலாவிடம் கேட்கிறார். நிலாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இருந்தாலுமே வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் இது எனக்கு ஒருவர் கொடுத்த கிஃப்ட். அதனால் தான் இதை கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் வானதி வீட்டிற்கு வரவில்லை என்று அவருடைய அப்பா, அம்மா எல்லோருமே பதட்டமாகி புலம்பி கொண்டிருக்கிறார்கள். வானதியின் அண்ணன், பாண்டியன் இடம் வேலை செய்பவரிடம் சென்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் ராகவ கொடுத்த வாட்ச்சை பற்றி பேச வருகிறார். சோழன் கடுப்பாகி கோபப்படுகிறார். அதற்குப்பின் ராகவ், நிலாவிற்கு தொடர்ந்து மெசேஜ் போட்டுக் கொண்டே இருக்கிறார். அதை எல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வருகிறது. எந்த ரிப்ளையும் செய்யாமல் போனை வைத்து விடுகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.






