விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் காரை விடாமல் போலீஸ் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் சோழனையும் அந்த பெண்ணையும் போலீஸ் பிடித்து விட்டார்கள். பெண் வீட்டார், போலீசும் சோழனை அடித்தார்கள். ஆனால், அந்த பெண் வாய் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சோழன் எவ்வளவு சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், சோழன் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னார்.

சோழன், தான் தவறு செய்யவில்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. அடி வெளுத்து வாங்கினார்கள். ஆனால், அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். ஒரு கட்டத்தில் சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே அழைத்து வந்து விட்டார்கள். சேரன், என் தம்பி மீது எந்த தவறும் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனை தான் திட்டினார்கள்.
அய்யனார் துணை:
பின் நிலா, சோழனை தனியாக அழைத்து சென்று விசாரித்தார். சோழன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு பிறகு அந்த பெண்ணிடமே நிலா, உண்மையை சொல்லு. நீ யாரை காதலித்தாய். எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறாய் என்றார். அதற்குப்பின் சோழனின் ஓனருக்கு போன் நிலா உண்மையை நிரூபிக்கிறார். கடைசியில் அந்த பெண், நடந்த எல்லா உண்மையும் சொன்னார். இதனால் போலீஸ்மே சோழன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

சீரியல் ட்ராக்:
பல்லவன், நடேசன் இருவருமே சோழனுக்கு என்ன நடந்திருக்கும் என்று கவலையில் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சோழன்- நிலா எல்லோருமே வீட்டிற்கு வந்து விட்டார்கள். சேரன், பாண்டியன் பேச வரும்போது கோபத்தில் சோழன், என்னை அவர்கள் அடித்தது கூட வலிக்கவில்லை. ஆனால், நீங்கள் என்னை விட்டுக் கொடுத்து என் மீது தான் தவறு என்று சொன்னீர்களே அது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். அதோடு தன்னுடைய சகோதரர்களையும் வெளுத்து வாங்கினார். பின் சேரன், பல்லவனிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோபத்தில் சோழன், நிலாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். சேரன், பாண்டியன் எல்லோருமே தடுத்துமே சோழன் கேட்கவில்லை. நிலா, நான் அவரை சமாதானம் செய்து அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். பின் ஒரு ஹோட்டலுக்கு நிலா, சோழனை அழைத்து செல்கிறார். அங்கு இருவருமே மனம் விட்டு பேசி கொள்கிறார்கள். நிலாவுமே சோழனை சமாதானம் செய்து ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் வீட்டிற்கு சோழன் வந்தவுடன் சேரன், பாண்டியன் எல்லோருமே மன்னிப்பு கேட்கிறார்கள். சோழனும் அமைதியாகி விடுகிறார்






