விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதியின் பெற்றோர்கள் அவர் காதலிக்கும் விஷயத்தை போலீசிடம் சொன்னார்கள். வானதி, அப்படி எல்லாம் இல்லை. நான் படிக்க நினைக்கிறேன் என்று தன்னுடைய பெற்றோர்கள் மீது திருப்பி விட்டார். இதனால் போலீஸ், வானதிக்கு பிரச்சனை என்றால் உங்களை தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என்று மிரட்டினார்கள். இதனால் வானதியின் பெற்றோர்கள் அமைதியாகி விட்டார்கள். பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார்.

நேற்று எபிசோட்டில் சோழன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், வானதி வீட்டில் நடந்ததை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார். வானதி தைரியமாக போலீசில் புகார் அளித்ததை நினைத்து எல்லோருமே பெருமையாக பேசினார்கள். அப்போது நிலா, நானும் அது மாதிரி செய்திருக்கலாம் என்றார். சோழன், நடக்காத வரை சந்தோஷம் என்று உள்ளுக்குள் நினைத்தார். அதற்குப்பின் சேரனுக்கு திருமணம் செய்வது பற்றி நிலா, நடேசன் இடம் பேசினார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவே இல்லை.
அய்யனார் துணை:
பின் சேரன் கல்யாணத்தை பற்றி நிலா பேச, வீட்டில் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அதற்குப்பின் ரோட்டில் சேரன் பெண்களுடன் கதை பேசி கொண்டு காய்கறி வாங்குவதை பார்த்து சோழன் திட்டினார். இன்னொரு பக்கம் பல்லவன், நிலா இருவருமே பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நிலா, பல்லவனிடம் விசாரித்தார். அத்ற்கு பல்லவன், எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், வானதி இருவருமே ரொம்ப ஜாலியாக தங்களுடைய திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நிலா போன் செய்ததால் சோழன் போகிறார். பின் சோழன்-நிலா இருவருமே ஒரு ஹோட்டலுக்கு நிலாவின் அம்மாவை சந்திக்க போகிறார்கள். அங்கு நிலாவின் அம்மா, அண்ணி இருவருமே இருக்கிறார்கள். அப்போது நிலாவின் அம்மா - அண்ணி இருவருமே விவாகரத்து அப்ளை செய்திருக்கிறீர்களா? திருமணம் ஆகி நான்கு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் விவாகரத்தா? இதற்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே நிலா, எப்படி இந்த விவாகரத்து விஷயம் இவர்களுக்கு தெரியும் என்று புலம்புகிறார். அப்போது சோழன், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறார். அதில் சோழன் தான் தன்னுடைய அப்பாவின் மொபைலில் இருந்து நிலாவின் அம்மாவிற்கு போன் செய்து விவாகரத்து பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த உண்மை நிலாவின் அம்மாவிற்கு தெரியவில்லை. சோழன் உண்மை தெரிந்து விடுமோ என்று பயப்படுகிறார். ஒரு வழியாக சோழன் செய்த வேலை யாருக்குமே தெரியவில்லை. அதற்கு பின் சோழன்- பாண்டியன் இருவரும் நிலா அம்மா வந்து பேசியதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த வானதியின் அண்ணன் வசந்த் வம்பிழுக்கிறார். பாண்டியன், வானதி தான் என் பொண்டாட்டி என்றெல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






