விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய போகும் விஷயம் தெரிந்து கொண்டார். பின் சோழன், அவர்களுக்கு உதவி செய்வதாக சொன்னார். அதனால் அந்த காதல் ஜோடிகளுமே சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவின் தோழி புது ப்ராஜெக்ட் பற்றி கேட்டார். நிலாவுமே அந்த ப்ராஜெக்ட்டை எப்படி எல்லாம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வேலை செய்யும் இடத்தில் சேரனால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. சந்தாவை நினைத்துக் கொண்டிருந்தார்.

சேரன், அந்த காதல் ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடக்கிறது. அந்த சமயம் பார்த்து அந்த கோயிலுக்கு பெண்ணுடைய சித்தப்பா வந்து விட்டார். அவர் போலீஸ் அதிகாரி. அவரை பார்த்தவுடன் மாப்பிள்ளையும் அவருடைய நண்பர்களும் தலை தெறிக்க ஓடிவிட்டார்கள். சோழனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சோழனுமே அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். அவருடன் அந்த பெண்ணும் வந்துவிட்டார்.
அய்யனார் துணை
பின்சோழன் காரை விடாமல் போலீஸ் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் சோழனையும் அந்த பெண்ணையும் போலீஸ் பிடித்து விட்டார்கள். பெண் வீட்டார், போலீசும் சோழனை அடித்தார்கள். ஆனால், அந்த பெண் வாய் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சோழன் எவ்வளவு சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், சோழன் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், தான் தவறு செய்யவில்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. அடி வெளுத்து வாங்குகிறார்கள். ஆனால், அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். ஒரு கட்டத்தில் சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே அழைத்து வந்து விடுகிறார்கள். சேரன், என் தம்பி மீது எந்த தவறும் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனை தான் திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் நிலா, சோழனை தனியாக அழைத்து சென்று விசாரிக்கிறார். சோழன் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்கு பிறகு அந்த பெண்ணிடமே நிலா, உண்மையை சொல்லு. நீ யாரை காதலித்தாய். எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்குப்பின் சோழனின் ஓனருக்கு போன் நிலா உண்மையை நிரூபிக்கிறார். கடைசியில் அந்த பெண், நடந்த எல்லா உண்மையும் சொல்கிறார். இதனால் போலீஸ்மே சோழன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். நிலா, சோழனின் நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார்.






