விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

வானதியின் அப்பா அம்மா இருவரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், வானதி கேட்கவில்லை. பின் வானதி கிளம்பி பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார். பாண்டியன் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பொங்கல் வைத்தார்கள். நடேசன், நிலாவை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து வானதிக்கு கோபம் தான் வருகிறது. இருந்தாலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் பாண்டியனை தனியாக அழைத்து சென்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
நிலா பொங்கல் வைத்துவிட்டு மற்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு சேரனுக்கு எல்லா உதவியும் நிலா செய்தார். பின் வீட்டில் எல்லோருக்குமே நிலா-சேரன் இருவரும் சேர்ந்து பரிமாறினார்கள். அப்போது வானதி, நான் ஒரு விஷயத்தை சொல்லணும் என்றார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றார். அப்போது வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். நீங்கள் எல்லோரும் என்னை பெண் கேட்டு வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்கிறார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், பாண்டியன் முகம் மட்டும் மாறுகிறது. பாண்டியனுக்கு அதில் உடன்பாடு இல்லை. எதுவுமே சொல்லாமல் பாண்டியன் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு சந்தா-அனிஷ் இருவரும் வருகிறார்கள். சந்தா வந்தவுடன் சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் சந்தா- சேரன் இருவரையும் சேர்ந்து நிலா போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை பார்த்து வானதிக்கு பொறாமையாக இருக்கிறது. அதற்குப்பின் சோழன், நிலா இருவரும் போட்டோ எடுத்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ராகவ், நிலாவிற்கு பொங்கல் வாழ்த்து சொல்லி இதுதான் உனக்கு தனியாக கொண்டாடும் கடைசி பொங்கல். அடுத்த வருடத்தில் இருந்து நாம் சேர்ந்து கொண்டாடுவோம் என்றெல்லாம் சொல்கிறார். இதனால் கடுப்பான சோழன், ராகவை திட்டி மெசேஜ் அனுப்பி விடுகிறார்.
இன்னொரு பக்கம் பல்லவன், சக்கரை பொங்கலை எடுத்துக்கொண்டு காயத்ரி பார்க்கப் போகிறார். அங்கு இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






