விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவிற்கு அவருடைய கணவர் ஃபோன் செய்து பணத்தைப் பற்றி கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து கோமலு கணவர் வீட்டிற்க்கே வந்து விட்டார். பின் கோமலு, அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நடேசன் கோபப்பட்டு கத்தினார். உடனே அங்கிருந்து கோமலு கணவர் தப்பித்து ஓடி விட்டார். பின் நடேசன், என்ன திட்டத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். உண்மையை சொல் என்று பல்லவன் அம்மாவின் கழுத்தை நெருக்குகிறார்.

அந்த சமயம் பார்த்து பல்லவன் வந்து விட்டார். கோமலு, இதற்கு தான் இங்கு நான் இத்தன நாட்களாக வராமல் இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றெல்லாம் நாடகமாடினார். இதெல்லாம் பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களிடம் நடந்ததை எல்லாம் பல்லவன் சொல்லி புலம்பினார். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி விட்டார்கள். கோமலு, அவருடைய கணவர் இருவருமே வீட்டிற்கு பின்பக்கம் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமலு, பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வருகிறேன். இங்கிருந்து கிளம்பு என்றார். இதை கேட்ட நிலா ஷாக் ஆனார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் கோமலு, எப்பயோ விட்டுப் போனது. இப்ப பார்த்த உடனே அவன் மீது தாய் பாசம் வந்துவிடுமா? பணத்தை வைத்திருக்கும் இடத்தை பார்த்து விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் இரு பணத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன். பணத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து கிளம்பிடலாம் என்று தன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம்
கேட்டு நிலா ஷாக் ஆகினார். பின் கோமலு பணத்தை எடுக்க உள்ளே போகிறார். பின் தொடர்ந்த நிலா, என்ன நடக்கிறது? எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். எதுவும் பேசாமல் கோமலு அங்கிருந்து தப்பித்து தன் கணவரை அழைத்துக் கொண்டு ஓடுகிறார்.

சீரியல் ட்ராக்:
நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடுகிறார். நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்படுகிறார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=eZEt3Ycell4
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன், கடையின் ஓனரிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்து கடையை லீசுக்கு பாண்டியன் பெயரில் வாங்கி தருகிறார். பாண்டியன் குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். நிலா வாழ்த்துக்கள் சொல்லி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த வானதி ஓரமாக நின்று பாண்டியன் தன்னை கூப்பிடாததை நினைத்து கோபப்பட்டு கொண்டிருக்கிறார். பின் பாண்டியனுக்கு வானதி போன் செய்கிறார். ஆனால், பாண்டிய எடுக்கவில்லை. இதனால் வானதி கோபத்தில் இருக்கிறார்.






