தங்கை கேரக்டர்க்கு பதிலாக தம்பி கேரக்டர் வைக்கலாம்னு தரணி சார் பிளான் பண்ணார், அதுக்கு என்னை செலக்ட் பண்ணார் – குட்டி பார்த்திபன் சொன்ன சுவாரசிய தகவல்.

0
791
Gilli
- Advertisement -

கில்லி படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். விஜய்யின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி கொடுத்த படங்களில் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் ஒன்று. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருந்தது. அண்ணன்- தங்கை இடையேயான செல்லமான சண்டை, அம்மா சென்டிமென்ட், அதிரடி ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது.

- Advertisement -

விஜய்-திரிஷா கம்போ:

அதோடு படத்தில் பிரகாஷ்ராஜ் மதுரை முத்து பாண்டியன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் திரிஷா- விஜய் உடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பெரிதும் கவர்ந்திருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது லியோ படத்தில் திரிஷா, விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

கில்லி படம் குறித்த விவரம்:

அது மட்டும் இல்லாமல் கில்லி படம் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஓக்கடு படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜயின் தங்கை வேடத்தில் ஜெனிஃபர் நடித்திருந்தார். இந்நிலையில் கில்லி படத்தில் விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர்குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தெலுங்கில் வெளியான ஓக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது தங்கை கதாபாத்திரத்திற்கு பதிலாக தம்பி கதாபாத்திரத்தை வைக்கலாம் என்று இயக்குனர் தரணி கூறி இருந்தார்.

-விளம்பரம்-

கில்லி படத்தில் சதீஸ்:

அப்போதுதான் விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் அழகு படத்தில் பார்த்திபனின் சிறுவயது வேடத்தில் நடித்த சதீஷை முடிவு செய்திருந்தார்கள். பின் சதீஷை அழைத்து ஆடிசனும் நடத்தி இருந்தார்கள். பின்னர் அண்ணன்- தங்கை காட்சிகள் தான் நன்றாக இருக்கும் என்று நினைத்து தரணி மாற்றி விட்டார். இதனை சமீபத்தில் நடிகர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த “அழகி” படத்தில் சிறு வயது நந்திதா தாஸுக்கு காதலனாக சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.

நடிகர் சதீஸ் குறித்த தகவல்:

இவர் சேரன் இயக்கத்தில் நடிப்பில் வெளி வந்த சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் சேரனின் தம்பியாக நடித்து இருந்தார். பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் நடித்து இருந்தார். பின் சதீஸ் அவர்கள் புதுமுக இயக்குநர் எஸ்.கே. மதி என்ற இயக்குனரின் இயக்கத்தில் “கூட்டாளி” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த கூட்டாளி படம் ரிலீசாகி வெற்றி அடையவில்லை. தற்போது இவர் பட வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார்.

Advertisement