அழகு சீரியல் நடிகைக்கு இவ்வளவு வயசாகிறதா. கேட்டா ஷாக்காவீங்க.

0
121268
thendral

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை என்று சொன்னால் நடிகை ஸ்ருதி ராஜை சொல்லலாம். ஏன் என்றால் அந்த அளவிற்கு பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சின்னத்திரையில் நடிகைகளில் மிகவும் அழகான மற்றும் அமைதியான முகம் உடையவர் நடிகை ஸ்ருதி ராஜ். தன்னுடைய சீரியல் நடிப்பின் மூலம் பல குடும்பப் பெண்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். ஸ்ருதி ராஜ் அவர்கள் முதன் முறையாக சினிமா உலகிற்கு மலையாள படத்தின் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் 1996-ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Image result for azhagu serial actress"

ஆனால், இவர் சினிமா துறையில் பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவு சினிமா உலகில் வெற்றி பெறவில்லை. மேலும்,மக்களிடையேயும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இதனால், இவர் சின்னத்திரை நோக்கிய பயணம் செய்தார். நடிகை ஸ்ருதி ராஜ் முதன்முதலாக சின்னத்திரையில் நடிக்க ஆரம்பிக்க தொடங்கியது பிரபலமான சீரியல் ஆன நடிகை தேவயானி நடித்த ‘கோலங்கள்’ தொடரில் தான். அதற்கு பிறகு நடிகை ஸ்ருதி ராஜ் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘தென்றல்’ சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும், அந்த துளசி கதாபாத்திரத்தை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. அதனால்,தென்றல் சீரியலை மீண்டும் யூடுப் சேனலில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதற்குப் பிறகு அபூர்வராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஆபீஸ் போன்று பல சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஸ்ருதி ராஜ் அவர்கள் “அழகு” சீரியல் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்,இந்த அழகு சீரியல் மூலம் மீண்டும் தனக்கென ஒரு ரசிகர் படையை சேர்த்து உள்ளார் என்று கூட சொல்லலாம்.

Image result for azhagu serial actress"

இப்படி சீரியலிலும், சினிமா துறையிலும் தூள் கிளப்பிய ஸ்ருதி ராஜிக்கு வயது குறித்து இணையங்களில் பல கேள்விகள் எழுகின்றன. தற்போது கூட இளமை ததும்பும் முகம் கொண்ட நடிகை ஸ்ருதி ராஜ் 40 வயது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியவில்லை. ஆனால், உண்மையிலேயே அவருடைய வயது 40 தான். அதுமட்டுமில்லாமல் இன்றுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், நடிகை ஸ்ருதி ராஜ் திருமணம் குறித்து பல பேர் விசாரித்தும்,கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பியும் வருகிறார்கள். அதற்கு நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது, நான் கூடிய விரைவில் என்னுடைய திருமணம் குறித்து சொல்கிறேன் என்று கூறினார்.இதை கேட்டு ரசிகர்கள் பயங்கர குஷியில் ஆழ்ந்தார்கள்.

Advertisement