ஷூட்டிங்கு போன மாசம் வர்மாட்ட சொன்ன, இப்போ சீரியலே முடிச்சிட்டாங்க – புலம்பிய அழகு சீரியல் ஸ்ருதி.

0
2999
sruthi
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் ன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

இந்த நிலையில் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ருதி இதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சுருதி. அதில் பேசியுள்ள அவர், என்னிடம் பலரும் அழகுசீரியல் என்னாச்சு? எப்போது புதிய எபிசோட் வரும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு முக்கிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். கடந்த மாதம் ஷூட்டிங்கிற்காக என்னை அழைத்தார்கள். ஆனால் கொரோனா பயத்தினால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். காரணம் எனக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது. சைனஸ் இருந்தால் சளி தோற்று போன்றவைகள் மிகவும் எளிதாக தொற்றிவிடும் என்பதால் என்னால் ரிஸ்க் எடுக்க முடியவில்லை.

நாங்கள் அனைவருமே இந்த மாதம் 8 ஆம் தேதி சூட்டிங் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென்று இந்த சீரியலை முடித்து விட்டதாக கூறியது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. சுதா கதாபாத்திரத்திற்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அழகு சீரியல் மூலம் ரேவதி மேடம் தலைவாசல் விஜய் சார் போன்ற நடிகர்களுடன் நடித்தது என்னால் மறக்கவே முடியாது. கண்டிப்பாக என்னுடைய டீமை நிச்சயம் மிஸ் செய்வேன். குறிப்பாக சஹானா காயத்ரி போன்றவர்களுடன் அடித்த கூத்துக்களை எல்லாம் மறக்க முடியாது என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement