இந்த சீரியலால என் வாழ்க்கயே வீணாப் போயிடும்போல – புலம்பும் அழகு சீரியல் நடிகை.

0
1847
azhagu
- Advertisement -

சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய் கொண்டு இருக்கும் சீரியல் அழகு. இது முழுக்க முழுக்க குடும்ப தொடர். இந்த சீரியலில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அழகு சீரியலால் தான் தன் வாழ்க்கையே வீணாப் போகுது என்று சஹானா பேட்டி அளித்து உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த கதையில் சஹானா ரேவதிக்கு ஒரே மகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து சஹானா கூறியது, இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதையில் நடிகை உள்ளீர்கள் என்று சொல்லிதான் கூப்பிட்டார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் நாலு அண்ணன், தம்பிகளுக்கு ஒரே தங்கச்சி. சொல்லப்போனால் ‘ சின்ன தம்பி’ குஷ்பு மாதிரி தான் நீங்க இந்த கதையில் நடிக்க போகிறீர்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் உங்கள் கேரக்டருக்கு தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்கு என்றது சொன்னார்கள். அதனால் தான் நான் சந்தோஷமாக நடிக்க ஒத்துக்கிட்டேன்.

இதையும் பாருங்க : பகவதி படத்தின் மூலம் சென்னை 28 படத்தில் ஜெய் கிடைத்த வாய்ப்பு – அதுவும் இந்த நடிகரால் தான்.

- Advertisement -

முதல் எபிசோடில் இருந்தே நான் நடிச்சுட்டு வர்றேன். சூட்டிங் ஸ்பாட்டில் நான் தான் சின்ன பொண்ணு. சீரியல் நல்லா போனது. பின்னர் என்ன காரணமோ? என்ன பிரச்சனையோ? தெரியவில்லை. என் கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கு. மேலும், எனக்கு தெரிந்தவர்களும் ஏன் டல்லா நடிச்சுட்டு இருக்கீங்க, எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத கதாபாத்திரமா? போயிட்டு இருக்கு என்று அடிக்கடி கூறுவார்கள்.

என்னுடைய வருத்தத்தை நான் டைரக்டர்கிட்டச் சொன்னேன். ஆனாலும், எந்த மாற்றமும் தெரியாததால் நான் தொடரில் இருந்து வெளியேறி விட்டேன். ஆனால், அடுத்த சில தினங்களில் சீரியல் யூனிட் என்னிடம் பேசினார்கள். பழையபடி தொடருக்குள் வந்தேன். சில மாதங்கள் ஷூட்டிங் போய் வந்துகொண்டிருந்த நிலையில் தான் கொரோனா வந்துவிட்டது. அதனால் ஷூட்டிங்கும் தடைபட்டது. தற்போது எனக்கு அழகு சீரியலில் நடிக்கறதையே விட்டுடலாம் என்று தோணுது. அவர்களால் என் வாழ்க்கையே வீணாப்போயிடுமோ என்ற பயமும் இருக்கு என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement