விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் பரிதவித்து இருந்தது. இறுதி சடங்கை கோபி செய்ய கூடாது பாக்கியா தான் செய்யணும் என்று ஈஸ்வரி சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை கங்கையில் கரைத்தார்கள். ராமமூர்த்தியை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், ராமமூர்த்தி கடிதம் எழுதி வைத்த விஷயம் தெரிந்து எல்லோரையுமே ஹாலில் வரவைத்த ஈஸ்வரி, செழியனிடம் உயிலை கொடுத்து படிக்க சொல்லி இருந்தார். அதைக் கேட்டு அனைவருமே அழுதார்கள். பின் ஒவ்வொருவருக்கும் தாத்தா எழுதிய கடிதத்தை படித்து வருத்தப்பட்டார்கள். இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி ஆத்மா பார்த்தது. இன்னொரு பக்கம் கோபி, பாரில் நிலைமை தெரியாத அளவிற்கு குடித்து விட்டு உளறி இருக்க, ராதிகா வந்து அழைத்துச் சென்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
ரெஸ்டாரண்டில் பாக்கியா தன்னுடைய மாமனாரை நினைத்து வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க, பழனிச்சாமி ஆறுதல் சொல்லி இருந்தார். வீட்டில் ஈஸ்வரி, தன்னுடைய கணவரின் 80 ஆவது பிறந்தநாள் வீடியோவை பார்த்து அழுது கொண்டிருக்க, செழியன்- ஜெனி இருவருமே சமாதானம் செய்தார்கள். நேற்று எபிசோடில், கோபி-செழியன் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, செழியன் தாத்தா படத்தை திறக்கும் விழாவை பற்றி சொன்னவுடன் கோபி, பாக்கியாவை தான் திட்டி இருந்தார்.
சீரியல் கதை:
மறுநாள் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எல்லோருமே வந்தார்கள். அப்போது கோபியும் வந்து நின்றார். அதற்குப் பின் ராமமூர்த்தி திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் ஈஸ்வரி. எல்லோருமே அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார்கள். பின் எல்லோரும் ராமமூர்த்தியை பற்றி பெருமையாக பேசிய இருந்தார்கள். கடைசியில் கோபி மைக்கை வாங்கி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டியும் பேச எல்லோருமே கோபப்பட்டு அமைதியாக இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, தன்னுடைய அப்பா தனக்கு துரோகம் செய்தது போலவே பேசி இருந்தார். இறுதி சடங்கை கூட செய்ய விடாதது குறித்து கோவமாக ராமமூர்த்தியை திட்டி பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி, பாக்யா எல்லோருமே கோபப்பட்டு இருந்தார்கள். அதற்குப்பின் பாக்கியா, கோபியை சந்தித்து நீங்கள் கொடுத்த சொற்பொழிவு எல்லாம் சரி, நீங்கள் என்னைக்கு உங்களுடைய பிள்ளைக்கு சரியான தந்தையாக இருந்தீர்கள்? என்று கேட்டவுடன் கோபி ஆத்திரத்தில் கத்தி பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பாக்கியா, நீங்கள் முதல் சரியாக இருங்கள். அடுத்தவர்களை பற்றி குறை சொல்வீர்கள் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். கோபி ரெஸ்டாரண்டில் தன்னுடைய நண்பரிடம், பாக்யா ரெஸ்டாரண்டில் நடந்ததையும், தன்னுடைய அப்பாவை பற்றி பேசியதையும் குறித்து சொல்லிக் கொண்டிருக்க, அவர் ஆறுதல் சொல்லியும் கோபி ஏற்றுக்கொள்ளாமல் பாக்கியா மீது வன்மத்தை கொட்டுகிறார். கடைசியில் பாக்கியா-எழில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில், வீடு பார்த்து விட்டேன். நீங்கள் வர வேண்டும் என்று சொன்னவுடன் பாக்யாவும் வருகிறேன் என்று அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.