விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்துவந்தார் ஜெனிபர்.
ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும், தன்னுடைய கதாபாத்திரம் செல்லும் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.
ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசிய ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம் என்று கூறி இருந்தார். கர்ப்பமாக இருக்கும் ஜெனி அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.
அதிலும் அந்த போட்டோ ஷூட்டின் போது ஒரு புகைப்படத்தில் நீருக்கு அடியில் தன் கணவருடன் லிப் லாக் கொடுத்ததும் இருந்தார். இந்த நிலையில் தன் வளைகாப்பு நிகழ்ச்சியில் கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார் ஜெனி. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.