அவருக்கு எந்த பெரிய பிரச்சனையும் இல்ல, ஆனா, அதை நினைத்து ரொம்ப வருந்தினார் – திடீரென்று இறந்த தன் தந்தை குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ஜெனி.

0
296
Jennifer
- Advertisement -

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த ஜெனிபரின் தந்தை இறந்துள்ள சம்பவம் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : படம் வரதுக்கு முன் ஒரு பேச்சு, பின்னாடி ஒரு பேச்சா, இதெல்லாம் அசிங்கம் – பீஸ்ட் குறித்து பீஸ்ட் நடிகரின் பேச்சால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

- Advertisement -

சீரியலில் இருந்து விலக காரணம் :

ஜெனிபர் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பது பலருக்கும் தெரியும். ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்த இவர் பல படங்களில் நடனமாடி இருக்கிறார். முதன் முதலில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படத்தில் லீட் டான்சராக ஆடி இருந்தார். அதில் பின்னர் பார்த்திபன் கனவு படத்தில் ‘ஏய் சிட்டு’ பாடல் மூலம் பெரும் பிரபலமடைந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலட்சுமி சீரியல் தான்.

ஜெனிபரின் தந்தை சின்னா :

ஜெனிபர் இப்படி சிறப்பாக ஆடக்காரணம், நடனம் என்பது அவரது ரத்தத்தில் ஊரிப்போன விஷயம். ஏனென்றால் ஜெனிபரின் தந்தை சின்னாவும் ஒரு டான்ஸ் மாஸ்டர் தான். தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் இவர் டான்ஸ் மாஸ்டராக பல ஹீரோக்களின் படங்களில் பணியாற்றி இருகிறார். மேலும், சிறந்த நடனத்திற்காக பல விருதுகளை பெற்று இருக்கிறார். எம் ஜி ஆர் கையால் கூட இவர் விருது பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

காலமான ஜெனியின் தந்தை :

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து போய் இருக்கிறார். தனது தனத்தையின் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெனிபர் ‘எனது தந்தை துரு துருவென இருப்பார். ஆனால், திடீர் என்று அவருக்கு கை கால் வராமல் நடக்க முடியாமல் போய்விட்டது. அதை தவற அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை’

ஆறுதல் கூறும் ரசிகர்கள் :

துருதுருவென இருந்த அவர் எழுந்து நடக்க முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். என்னால முடியல என்று அவரே வருத்தப்பட்டார். ஆனாலும், அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அவரை சந்தோசமாக வழியனுப்ப வேண்டும். உங்கள் அனைவரின் பிரார்த்தனை மிக்க நன்றி என்று கண்ணீருடன் கூறியுள்ளார். ஜெனிபரின் இந்த வீடியோவை கண்டு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement