பெண் ஒருவர் தன்னை மிரட்டுவதாக பாக்கியலட்சுமி நடிகர் சதீஷ்குமார் போலீஸிடம் புகார் – காரணம் இதோ

0
314
- Advertisement -

பிரபல சீரியல் நடிகர் சதீஷ் குமார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள வினோதமான புகாரைப் பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகர் சதீஷ்குமார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகர் சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு கலாசேத்திர காலணியில் உள்ள அறுபடை முருகன் கோவிலுக்கு அவர் சென்றபோது, பெண் ஒருவர் சதீஷ்குமாரிடம் செஃல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு இவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண் யார் மூலமோ சதீஷ்குமாரின் செல்போன் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

சதீஷ்குமார் புகார்:

பின் அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரை சதீஷ்குமார் பிளாக் செய்திருக்கிறார். இந்நிலையில்தான் சதீஷ்குமாரின் வீட்டை கண்டுபிடித்து வந்த அந்தப் பெண், குங்குமம் தடவி எலுமிச்சம் பழத்தை காட்டி செய்வினை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து நடிகர் சதீஷ்குமார் சென்னை திருவான்மையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்தவிஷயம் தான் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ்குமார் கோபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் தனது மனைவி பாக்கியவை பிரிந்து கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். பின் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக ராதிகா கீழே விழுந்து கர்ப்பம் கலைந்து விடுகிறது. இதனால் கோபப்படைந்த ராதிகா நீங்கள் தான் காரணம் என கோபியின் அம்மா ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி தீர்த்தார். பின் கோபி, தனது அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் ராதிகாவின் அம்மா கமலா, கோபி அம்மா மீது புகார் கொடுக்க, காவல்துறையினர் ஈஸ்வரியை கைது செய்கின்றனர். பின் ராதிகாவின் மகள் மையூ பாக்கிய மூலம் சொன்ன சாட்சியால், நீதிமன்றம் ஈஸ்வரியை விடுதலை செய்கிறது. அதனால் கோபம் அடைந்த ராதிகா, பொய் கேஸ் போட்டதற்காக தனது அம்மாவை திட்டுகிறார். இந்நிலையில் கோபியின் அம்மா ஈஸ்வரி, கோபியை தனது மகனே இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் சமையல் போட்டியில் பாக்யா மற்றும் கோபி பங்கு பெற்றார்கள்.

சீரியல் அப்டேட்:

இந்த சமையல் போட்டியில் பாக்கியாவை கோபி எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கு இடையில் வீட்டில் பொய் சொல்லிவிட்டு பார்ட்டிக்குச் சென்ற பாக்யா மகள் இனியாவை, பார்ட்டியில் நடக்கும் பிரச்சனையால் போலீஸ் கைது செய்கிறது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்யாவிற்கு போன் செய்து வரவைக்கிறார். பாக்கிய வந்தவுடன், நீ என் மகளை நீதிமன்ற வாசலில் ஏற்றி விட்டாய், ஆனால் நான் உன் மகளை போலீசில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். இதுதான் ராதிகாவிற்கும் பாக்யாவிற்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்ல. சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது.

Advertisement