புலம்பினேன், ஒப்பாரி வச்சேன், ஆனா நீங்க – பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வெளியிட்ட உருக்கமான வீடியோ. (ஏன்யா இந்த மனுஷன இப்படி பண்றீங்க)

0
927
gopi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is b-1024x768.jpg

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராகசதீசும் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் இவர் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் ‘இந்த கோபி பையன பாத்தாதான் எரிச்சல் ஆகுது. நல்ல பொண்டாட்டி கிடெச்சி இருக்கு அதன் அவனுக்கு கொழுப்பு ‘ என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : வயசாகிடிச்சி கல்யாணம் ஆகலனு ஒரு மாதிரி பேசுவாங்க – ஆனா, நான் திருமணம் செஞ்சிக்காதுக்கு காரணம் இதான்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த கோபி, சமூக வலைத்தளத்தில் இவரது கதாபாத்திரத்தால் பலரும் இவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் இதற்கு பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் சதீஷ். ஆனால், அப்போதும் இவரை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். இதனால் கடுப்பான கோபி, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், கடந்த சில நாட்களாக புரோமோவை பார்த்துவிட்டு பலரும் எனது இன்பாக்ஸில் வந்து மிகவும் வக்கிரமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். தயவுசெய்து கேட்கிறேன், அது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார்.

மற்றொரு வீடியோவில் பேசிய அவர், “நான் புலம்பினேன். ஒப்பாரி வைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பலரும் எனக்காக ஆறுதலான வார்த்தைகளை அனுப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று மனம்வருந்தி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்த பலரும் சதீசுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement