நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள கோவை சரளா, 59 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கும் காரணத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தனிமைதான் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை நான் யார்னு உணர இத்தனிமை உதவுது. நான் யார்கிட்டயும் அதிகமாகப் பேச மாட்டேன். என்னை மதிச்சு பேசுறவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்துக் கேட்பேன். ‘கல்யாணம் செய்துக்கலை; வயசாகியும் ஓடியாடி நடிக்கிறாள்’னு பலவிதமாகச் சொல்றாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை. நடிப்பின்மூலம் மக்களை மகிழ்விக்கிறதுதான் என் ஒரே நோக்கம். அதுக்காக நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன்.
இதையும் பாருங்க : Mr&Mrs சின்னத்திரையில் அர்ச்சனாவை மாற்ற சொன்ன ரசிகர்கள் – அர்ச்சனா கொடுத்த மறைமுக பதிலடி.
எப்போ எனக்குக் கண்ணு சரியாகத் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாத நிலை வருதோ அப்போதான் வயசாயிட்டதா நினைப்பேன்.அதுவரை நான் 18 வயசுப் பொண்ணுதான். அந்த உற்சாகத்தோடுதான் இரவு பகல் பார்க்காமல் உழைப்பேன். அதுக்காக, கோடிக்கணக்குல சொத்து சேர்த்துடலை. என் அடிப்படைத் தேவைக்கானதைதான் வெச்சிருக்கேன். ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துட்டில்லை.
4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.