-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ராமமூர்த்தி தாத்தா இறந்து போற மாதிரி சீன் எடுக்கும்போது, பாக்கியலட்சுமி சீரியல் குழந்தை நட்சத்திரம் மயூ சொன்னது

0
223

பாக்கியலட்சுமி சீரியலில், மயூ கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷெரின் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் லீட் ரோலான பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஷ், ரேஷ்மா, நேகா, ஷெரின் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில், சீரியலில் நடிகர் ரேஷ்மாவின் மகளாக நடிப்பவர் தான் குழந்தை நட்சத்திரம் ஷெரின். தனது இயல்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றவர் இவர். சமீபத்தில் ஒரு பேட்டியில், சின்னத்திரையில் தனது பயணங்கள் குறித்து ஷெரின் பேசியுள்ளார். அதில், நான் யூ.கே‌.ஜி படிக்கும் போது இருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘பாசமலர்’ சீரியல் தான் என்னோட முதல் சீரியல். அப்போதெல்லாம் டைரக்டர் என்ன சொல்றாங்களோ, அதை அப்படியே நடிப்பேன். அம்மா தான் என்னை சூட்டிங்குக்கு கூட்டிட்டு போவாங்க.

ஷெரின் பேட்டி:

மேலும், எப்படி நடிக்க வேண்டும் என்று எனது அம்மா தான் சொல்லித் தருவாங்க என்றார். அதேபோல், ‘மௌன ராகம்’ சீரியலுக்கு தாய்செல்வம் சார் தான் என்னை ஆடிஷன் பண்ணினார். முதலில் நான் கிருத்திகா நடித்த சக்தி ரோலுக்காக தான் ஆடிஷனுக்கு போனேன். ஆனால், ஸ்ருதி கதாபாத்திரத்திற்கு தான் என்னை தேர்வு செய்தார்கள். ஆடிஷன் அப்போ தாய்செல்வம் சார், என்கிட்ட பிரியாணியும் சிக்கன் 65வும் கேட்டாரு. நான் அப்போ தரமாட்டேன் சொல்லிட்டேன்.

மௌன ராகம் குறித்து:

-விளம்பரம்-

அதனால், என்னை செலக்ட் பண்ண மாட்டார் என்று நினைத்தேன். ஆனா, சீரியல் ஆடிஷனுக்கு வந்த 300 பேரில் நானும், கிருத்திகாவும் மட்டும் தான் செலக்ட் ஆனோம். தாய்செல்வம் சார் என்னை எப்போதும் ‘ரோசாப்பூ’ என்று தான் கூப்பிடுவார் என்று ஷெரின் கூறியுள்ளார். அதற்குப் பிறகு நான் நடிக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் ஆரம்பித்து, பாதி முடிந்த பிறகு தான் நான் என்ட்ரி ஆனேன். ஏற்கனவே, மயூ கதாபாத்திரத்தில் நடிச்சவங்க விலகிட்டாங்க.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி குறித்து:

அதனால் அவர்களுக்கு பதிலாக தான் நான் நடிக்கப் போறேன் என்று, செட்டுக்கு போன பிறகு தான் எனக்கு தெரிஞ்சது. எனக்கு ஏற்கனவே ரேஷ்மா மம்மியை தெரியும். அவங்களைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப குஷி ஆயிடுச்சு. அதனால் எனக்கு அந்த சீரியலில் நடிக்கும் போது கஷ்டமாக தெரியவில்லை. இப்ப செட்டில் எல்லாருமே ரொம்ப நல்லா என்கிட்ட பழகுகிறார்கள். இப்போ பாக்கியலட்சுமி சீரியலில், ராமமூர்த்தி தாத்தா இறந்து போற மாதிரி சீக்குவன்ஸ் போயிட்டு இருக்கு.

ராமமூர்த்தி மறைவு :

ராமமூர்த்தி தாத்தா மறைந்துவிட்டார் என்று எல்லா சடங்குகளும் பண்றாங்க. அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னை விட்டு இருந்தால் நான் அங்கே ரொம்ப அழுது இருப்பேன். நல்லவேளை நான் சின்ன பெண் என்று, கடைசியில என்னை கூப்பிடவில்லை. இல்லையென்றால் வீட்டுக்கு வந்தும் அது நினைத்து அழுந்தியிருப்பேன். மேலும், இந்த சீரியல் முடிந்து விட்டால் கண்டிப்பாக எல்லாரையும் மிஸ் பண்ணுவேன் என்று குழந்தை நட்சத்திரம் ஷெரின் பகிர்ந்துள்ளார்

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news