இறுதி சடங்கை ரியலா பண்ண சொன்னாங்க, ராமமூர்த்தி இறந்த காரணம்- மனம் திறந்த பாக்கியலட்சுமி நடிகர்

0
776
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி ஒன்று. இந்த சீரியல் பெண்கள் தங்களின் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா, அவரின் கணவனாக கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் நேகா, ரேஷ்மா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியல் ஒளிப்பரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. தற்போது சீரியலில் ஈஸ்வரி, குழந்தை இல்லை என்று அமிர்தா விடம் கேட்க, எழில்- ஈஸ்வரிக்கு இடையே பயங்கர சண்டை நடந்தது. இதனால் எழில் வீட்டை விட்டு சென்று விட்டார். பின் தாத்தாவின் 80-வது பிறந்த நாளை கோயிலில் கோலாகலமாக பாக்கியா குடும்பம் கொண்டாடி இருந்தார்கள். இந்த விழாவிற்கு எழில்- அமிர்தா வந்திருந்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபியும் இந்த விழாவிற்கு வந்தார். ஆனால், ஈஸ்வரி- ராமமூர்த்தி இருவருமே கோபியை திட்டி அனுப்பி விட்டார்கள். பின் ராமமூர்த்தி மனநிறைவில் குடும்பத்தில் எல்லோரிடமும் பேசி சந்தோஷமாக தூங்கினார். மறுநாள் காலையில் அவர் இறந்து இறந்துவிட்டார். இவருடைய இறப்பு பாக்யா குடும்பத்தில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனி அடுத்து என்ன நடக்கும்? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் எஸ்டிபி ரோசரி. இவர் இதற்கு முன்பே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதுமட்டுமில்லாமல் இவர் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. சீரியலில் நடிகர் ரோசரி இறந்தது போல காட்சி காண்பித்திருக்கிறார்கள். இனி இவர் இந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரோசரி, ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த முடிவு எடுத்தார்கள்? என்று தோன்றியது. பின் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்குகிறது என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

ரோசரி பேட்டி:

அதேபோல் கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரம் முடிவடையும் என்றும் சொல்லியிருந்தார்கள். அதனால் வேறு வழி இல்லை. ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்தது நான் இல்லை. என்னுடைய அப்பா தான் அவரும். 80 வயதில் தான் தவறினார். அவருடைய பெயரும் புகழுடையார். கஷ்டப்பட்டு படித்து இன்கம்டாக்ஸ் ஆபீஸில் வேலை பார்த்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நான் அப்படியே அவரை தான் பிரதிபலித்தேன். எங்கள் ஊரில் பலருமே என்னை அப்பா மாதிரி இருக்கிறேன் என்று சொல்வார்கள்.

கடைசி காட்சி குறித்து சொன்னது:

நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் முடிந்தது. இந்த கதாபாத்திரம் முடிந்தது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நான் இறைவனை ரொம்ப நம்புபவன். இது நடக்கணும் என்று இருக்கு அவ்வளவுதான். அண்ணா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் என்னுடைய கதாபாத்திரத்தை முடிகிறது என்று சொன்னார்கள். இதுக்கு எதுக்கு நேரில் வந்தீர்கள் என்று கேட்டதுமே இறுதி சடங்கு எல்லாம் ரியலா பண்ணனும் என்று சொன்னார்கள். சரி ஓகே பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். நான் கலையை மதிக்கிறவன். அது நடிப்பு அவ்வளவு தான். ரோசரி நல்லா தான் இருக்கேன். ராமமூர்த்திக்கு தான் இறுதி சடங்கு பண்றாங்கன்னு எடுத்துக் கொண்டேன். ஆனால் வீட்டில் உள்ளவங்க ரொம்பவே வருத்தப்பட்டார்கள் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.

Advertisement