18 ஆண்டுக்கு முன் வெளியான தன் பாடலுக்கு தற்போது கற்பதோடு நடனமாடி வீடியோ வெளியிட்ட ஜெனிபர்.

0
16816
jeni
- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் பிரபலமடைந்த பாடலுக்கு தற்போது நடனமாடி ஜெனிபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.

- Advertisement -

இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார். ஜெனிக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தை குறித்து பேசியுள்ள ஜெனி, நான் கர்பமாக இருப்பது என் மகனுக்கு தான் அதிக சந்தோஷம்.அவன் தான் என்னிடம் எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று கேட்பான்.

அவனுக்கு துணையாக யாராவது வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுத்தேன். ஜெனிபர், தமிழ் சினிமாவில் ஒரு குரூப் டான்ஸராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவர் மிகவும் பிரபலமடைந்தது ‘பார்த்திபன் கனவு’ படத்தில் வெளியான பாடல் மூலம் தான். இந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து அதே பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement